Site icon Vivasayam | விவசாயம்

மாப்பிள்ளை சம்பா அரிசியில் உணவு தயாரிப்பு (பகுதி-3)

மாப்பிள்ளை சம்பா அரிசி பிரியாணி:

தேவையான பொருட்கள்

  • ஒரு கப் மாப்பிள்ளை சம்பா அரிசி
  • பட்டை, லவங்கம், ஏலக்காய் மற்றும் பிரிஞ்சி இலை
  • ஒரு பச்சை மிளகாய்
  • ஒரு வெங்காயம்
  • ஒரு தக்காளி
  • அரை ஸ்பூன் இஞ்சிப் பூண்டு விழுது
  • ஒரு கேரட்
  • ஒரு கப் பச்சை பட்டாணி
  • ஒரு உருளைக்கிழங்கு
  • 10 சிறிய துண்டுகள் பன்னீர்
  • புதினா
  • ஒரு டீஸ்பூன் தயிர்
  • ஒரு டீஸ்பூன் பிரியாணிமசாலா தூள்
  • சிறிது சிவப்பு மிளகாய்த்தூள்
  • மஞ்சள் தூள்
  • உப்பு

செய்முறை

  • மாப்பிள்ளை சம்பா அரிசியை நன்கு கழுவி அரை வேக்காடு வேக வைத்துக் கொள்ளவும்
  • காய்கறிகளை சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்.
  • கடாயில் நெய் ஊற்றி பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை, ஏலக்காய் தாளித்து பச்சைமிளகாய், வெங்காயம், தக்காளி வதக்கி மஞ்சள் தூள், உப்பு, பிரியாணி மசாலா சிறிது சிவப்பு மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • புதினா மற்றும் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
  • நன்கு வதக்கியதும் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து வதக்கவும்.
  • அதை தட்டில் மாற்றி அந்தக் கடாயில் அரைப் பதம் வெந்த மாப்பிள்ளை சம்பா அரிசியைப் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து மேலே வதக்கிய காய்கறிகளை பரப்பி கனமான பாத்திரம் அல்லது மூடி வைத்து 20 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்.
  • சுவையான சத்தான மாப்பிள்ளை சம்பா பிரியாணி ரெடி.

கட்டுரையாளர்: ச .கண்ணன், வேளாண்மை அலுவலர் மற்றும் இயற்கை ஆர்வலர், மயிலாடுதுறை. அலைபேசி எண்-9965563563.

Exit mobile version