Site icon Vivasayam | விவசாயம்

சோளத்தின் நச்சுத்தன்மையும் அதன் பாதுகாப்பு முறைகளும்

சோளம் என்பது கால்நடைகளுக்கு மிகவும் முக்கிய தீவனப் பயிராகவும், மனிதர்களுக்கு உணவாகவும் திகழ்ந்து வருகின்றன. இவற்றில் முக்கிய காரணியாக எதிர் ஊட்டச்சத்து சயனோஜெனீசிஸ் (Anti-nutritional, Cyanogenesis) உள்ளது. இது கால்நடைகளுக்குத் தீவனமாக அளிக்கும் பொழுது மிகுதியான நச்சுத்தன்மை உண்டாகும்.

சயனோஜெனிக் நச்சுத்தன்மை

கால்நடைகளை சோளப் பயிர்களில்  மேய்ப்பதினால் ஹைட்ரோசையானிக் அமிலம் (HCN) வெளியிடுவதால் ப்ருசிக் அமில (Prussic acid) விஷம் ஏற்படுகிறது. ஹைட்ரோசியானிக் அமிலம் (HCN)  வெளியிடுவதால் சில நிமிடங்கள் அல்லது சில மணி நேரங்களிலேயே கால்நடைகளில் ஆக்ஸிஜன் உறிஞ்சுவதை தடுக்கிறது. இவ்வாறு நடக்கும் போது கால்நடைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணத்திற்கு வழிவகுக்கிறது.

நச்சுத்தன்மையைத் தவிர்க்கும் முறைகள்

  • மண்வளத்தை பராமரிக்க வேண்டும், போதுமான மணிச்சத்து(P) மண்ணில் இருந்தால் ப்ருசிக் அமிலம் (Prussic acid) உற்பத்தியை தடை செய்யும் மற்றும் தழைச்சத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளவும் வழி வகுக்கும்.
  • அதிக தழைச்சத்து(N) பயன்படுத்துவதும் ப்ருசிக் அமிலம் ஆனது மிகுதியாக காணப்படும் மற்றும் நைட்ரேட் நச்சுத் தன்மையும் தாவரத்தில் காணப்படும். சமச்சீரற்ற தழைச்சத்தை இடுவதை தவிர்ப்பதன் மூலமாக ப்ருசிக் (Prussic acid) நச்சுத் தன்மை மற்றும் நைட்ரேட் (nitrate) நச்சுத் தன்மையும் அறவே தவிர்த்து விடலாம்.
  • இவ்வாறு ஆபத்தான தீவனப் பயிரின் முக்கியமான நிலைகளில் (30-45 நாட்கள்) கால்நடைகளுக்கு அளிப்பதை அறவேத் தவிர்க்க வேண்டும்.
  • விரைந்து வளரக்கூடிய திசுக்களில் அதிக நச்சுத்தன்மை கொண்ட ப்ருசிக் அமிலம் 10 முதல் 14 நாட்கள் வரை இருக்கும்.

முக்கிய குறிப்பு

  • பனியினால் பாதிக்கப்பட்ட பயிர்களில் ப்ருசிக் அமிலம் மிகுதியாக காணப்படும்.
  • கால்நடைகளை இவ்வாறு பணியினால் பாதிக்கப்பட்ட பயிரில் மேய்ச்சலை குறைந்தபட்சம் ஒன்றிலிருந்து இரண்டு வாரங்களாவது தவிர்க்க வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட கால்நடைக்கு புளி அல்லது சர்க்கரையை முதலுதவியாக வாயில் கரைத்து ஊற்றலாம், அதோடு உடனடியாக கால்நடை மருத்துவரை அழைத்து சிகிச்சை அளிப்பதன் மூலம் இறப்பிலிருந்து காப்பற்றலாம்.

 

கட்டுரையாளர்கள்:

ச. வெ. வர்ஷ்னி

மற்றும் கோ.சீனிவாசன்

முனைவர் பட்ட படிப்பு மாணவர்கள் (உழவியல் துறை), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.

Exit mobile version