Site icon Vivasayam | விவசாயம்

வயலை ஏர் உழுது நடவு செய்ய!

 

1.அதிர ஓட்டி  முதிர அறு: நம் வயலை ஏர் உழும்பொழுது கால்நடகைகளை வைத்து ஏர் உழவேண்டும். கால்நடைகளின் கால் குலம்பு படும் மண் இயற்கை ரீதியாக வளமாக அமைகிறது.  கோடையில் சித்திரை மாதத்தில் ஏர் உழுது பண்படுத்திய வயலில் நன்கு விளையும்.

2.அரசமரத்து இலை, ஆலமரத்த்துஇலை, வேப்பமரத்து இலை, நெல்லிமரத்துஇலை, மாமரத்துஇலை இவை அனைத்தையும், காய்து உதிர்ந்த தழைகளை சேகரித்து சாகுபடி செய்யும் நிலத்தில் போட்டுவை.  மழையில் நனைந்து காய்ந்து நிலத்தில் இருந்துகொண்டு நிலத்தை பண்படுத்தி நல்ல விளைச்சலை பெருக்கும். எந்த பூச்சிகளும் நிலத்தில் வளராது.

3.அரசமரத்து குச்சி, ஆலமரத்துகுச்சி, நெல்லிக்குச்சி, மா குச்சி, பசுஞ்சானம், நெய் இவற்றை விட்டு எரித்த கரியுடன் பசுங்கோமியம் கலந்து பயிருக்கு தெளித்தால் பயிரில் எந்த பூச்சியும் வராதும்.

4.கோடையில் கிடைபோடு என்ற பழமொழிக்கேற்ப கோடையில் கால்நடைகள் கிடைபோடவேண்டும்.  கிடைபோடும்போது கால்நடையின் சிறுநீர், சாணம், எச்சில், இவை நிலத்தில் உள்ள கரியமில வாயுவை எடுத்துகொண்டு நன்கு விளையும்.

5.விதைநெல் சேமித்துவைக்கும் கிடங்கியின் மேலும் பக்கத்திலும் நொச்சி இலை, வேப்ப இலை போட்டு வைத்தால், விதைகளை எந்த பூச்சியும் தாக்காது.

  1. விதை நெல், பயறு வகைகளை அமாவாசையில் காயவைக்கவேண்டும்.

தகவல்: கே. அமுதா, தஞ்சாவூர்.

Exit mobile version