Dr. Karthik raja,M.D,
Chennai.
இருமல் ஏற்பட்டால் நான் ஏன் முகத்தை மறைக்க வேண்டும்? எனக்கு நோய் வந்தால், மற்றவர்களின் பாதுகாப்பு குறித்து நான் ஏன் கவலைப்பட வேண்டும்? அது எப்படியும் என்னைக் கொல்லப் போகிறது.
சரி சுயநலவாதியே
கேளு
நோய் வந்த அனைவரும் சாக வில்லை. மக்கள் இந்த நோயிலிருந்து உயிர் பிழைத்துள்ளனர். சீனாவில் இறப்பு விகிதம் 3% மட்டுமே, ஏனெனில் அவர்களுக்கு சரியான தரமான மருத்துவ உதவி கிடைத்தது.
பெரும்பாலும் வயதானவர்கள் மட்டுமே இறந்தனர், ஏனெனில் இளைஞர்களுக்கு நல்ல மருத்துவ வசதி கிடைத்தது, அவர்களால் பிழைக்க முடிந்தது. இளம் மருத்துவர்கள் இறந்ததை நினைவில் கொள்க. எனவே இது உங்களுக்கு நடக்காது என்று நினைக்க வேண்டாம்.
நீங்கள் நோயைப் பரப்பவில்லை என்றால், உங்களுக்கு நல்ல மருத்துவ உதவி கிடைக்க நல்ல வாய்ப்பு உள்ளது, தேவைப்பட்டால் வென்டிலேட்டரைப் பெறலாம். ஆனால் வெகுஜன மக்களுக்கு இந்த நோய் வந்தால், உங்களுக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டால் போதுமான மருத்துவர்கள், அல்லது செவிலியர்கள் அல்லது உபகரணங்கள் கூட இருக்காது.
எனவே சமூகத்தையும் சக நபரையும் பாதுகாக்கவும். ஒரு பொறுப்புள்ள குடிமகனாக இருங்கள், உங்களுக்கு நோய் வராமல் போகலாம் மீறி வந்தாலும், அதிலிருந்து உயிரோடு குணமாக ஒரு வாய்ப்பு இருக்கும்
கைகளைக் கழுவுங்கள், முகத்தைத் தொடாதீர்கள். முகமூடியை வீணாக பயன்படுத்தாதீர்கள். அறிகுறிகளைக் கொண்டவர்கள் முகமூடியை பயன்படுத்த கொஞ்சம் விட்டு வைங்க. சானிடிசர்களைப் அனைவரும் பயன்படுத்துங்கள்.
உங்களைப் பாதுகாக்க சமூகத்தைப் பாதுகாக்கவும்.
#covid19
#communitycareisselfcare
#coughetiquette
#sanitiserforall