நல்லதொரு களஞ்சியத்திற் சேர்ப்ப தற்கு
நலமுடைய பூர்வ பட்சங்குளிகன்வேளை
வல்லசனி திங்கள் புதன் வியாழம் வெள்ளி
வாரம் பஞ்சமி தசமி திரயோதேசி
மெல்லதிரி சிரி திசை துதிகை யோகா தோசை
மிக்கசத்த மியும்பூ ரணையு மாகும்
சொல்லவே அசுபதியும் அனுஷஞ் சோதி
சுகமாமூன்றுத்திரங்களின்னங் கேளே.
பெரியதொரு பரணியா திரையும் பூசம்
பேசு மகம் புனர்பூசம் ரோக ணீயும்
உரியதொரு மிருகசீரிடமும் ஓணம்
ஓங்குமஸ்தம் மூலமொடு முப்பூரந்தான்
அரியதொரு ரேவதி நட்சத்திரங்கள்
ஆகியதோ ரிஷப சிங்க மீனந்தன்னில்
தெரியவே தானியத்தைக் களஞ்சி யத்திற்
சேர்த்துவிட நல்லநாளிதுவாம் பாரே.
எந்தத்தா னியமா னாலு மிந்நாளில் விரை விதைத்து
இந்தந்த நாளி லேதான் அன்புடன் விளைந்த பின்பு
சொந்தமாய்க் களத்திற் சேர்ந்த சுகமுள்ள தானியத்தைச்
சிந்தனை யில்லா மற்றான் சேர்த்திடு களஞ்சிய யத்தே
விளைந்த நல்லதொரு தானியத்தை களஞ்சியத்திலோ அல்லது நமது சேமிப்புக்கிடங்குகளில் சேர்ப்பதற்கு சித்தர்கள் கூறிய வழிமுறைகள்
பூர்வபட்ச, குளிகன் வேளைகளில்
சனி, திங்கள், வியாழன், வெள்ளி, புதன் ஆகிய நாட்களில் வரக்கூடிய
பஞ்சமி, தசமி, திரியோதேசி, திரிதிகை, துதிகை, ஏகாதசி, சப்தமி,பவுர்ணமி ஆகிய திதிகளில் , அஸ்வினி, அனுசம், ரேவதி, பரணி, திருவாதிரை, பூசம், மகம், புனர்பூசம், ரோகிணி, திருவோணம், மிருக சீரிடம், மூலம், பூரம்,பூரட்டாதி,பூராடம் ஆகிய நட்சத்திரங்களில்,
ரிசபம், சிம்மம், மீனம் ஆகிய அந்நாளில் வரும் லக்கினங்களில் எந்த விதமான விதை, தானியங்களையும், சேமிப்பு கிடங்குகளில் சேமிக்கலாம். குறைவில்லாத தானியம் கிடைக்கும் என்பது சித்தர்கள் வாக்கு
மருத்துவர் பாலாஜி கனகசபை
அரசு மருத்துவர்
கிருஷ்ணகிரி மாவட்டம்
99429-22002