வாரமதிற் றிங்கள்புதன் வியாழம் வெள்ளி
வருகின்ற துதிகைதிரி திகையினோடு
காரமுள் பஞ்சமியுந் திரயோ தேசி
தசமியே காதசிபூ ரணையும் நன்றாம்
பாரமுள்ள மூலம் ரோ கணியும் பூசம்
பட்சமுத்தி ரட்டாதி சதய மோணம்
நேரமுள்ள அஸ்தமுடன் மகம் விசாகம்
நிலைபெற்ற சோதிரே வதியுந் தானே.
வல்வதொரு சிங்கம் விடை மிதுனம் கும்பம்
வழுத்துகின்ற கடக துலாம் மகர மீனம்
எல்லவர்க்கும் விரைவிதைக்க நாளதாகும்
இவையோடு நாற்றுநட யிந்நாள் வானம்
நல்லபா தாளயோகினி கூடாது
நலமில்லான் கரிநாட்கள் மரணயோகம்
இல்லாதாட் பார்த்துப்பூ தேவி தன்னை
இயல்பாகப் போற்றி செய்து நடுதல் நன்றே
பொருள்
விதை விதைக்க நாற்று நடுதல் நல்ல நாள் பார்த்து நடும்போது சரியான மழை பெய்யும், சரியாக வரும். அதன் பொருட்டு
திங்கள், புதன், வியாழன், வெள்ளி கிழமைகளில் வரக்கூடிய வளர்பிறை நாட்களில் திதிகை, திரிதிகை, பஞ்சமி, திரயோதசி, தசமி, பவுர்ணமி கொண்ட திதிகளில் , மூலம், ரோகிணி, பூசம், உத்திரட்டாதி, சதயம், திருவோணம், அஸ்தம், மகம், விசாகம், ரேவதி போன்ற நட்சத்திரங்கள் வரும் மேற்கண்ட நாட்களில் சிம்மம், மிதுனம்,கும்பம், கடகம், துலாம் மகரம், மீனம் கொண்ட லக்கினங்களில் நாற்று நட மற்றும் விதை விதைக்க நல்ல நாளாக அமைகிறது. இப்படி முறையாகச் செய்தால் இயற்கைச் சீற்றங்களில் இருந்து பயிர்களுக்கு பாதுகாப்பும், அதிக மகசூலும் கிடைக்கும் என்று சித்தர்கள் கூறியுள்ளனர் .
மேலும் விதை விதைக்கும் முன் பூமிக்கு பூஜை செய்து நாற்று நட வோ விதை விதைக்கவோ தொடங்கவேண்டும்.
உதாரணம்
வியாழக்கிழமை, உத்திரட்டாதி நட்சத்திரம் , வளர்பிறை பஞ்சமி திதி, சித்த யோகம், இந்த நாளில் மேற்கண்ட லக்கினத்தை குறித்துக்கொண்டு நாற்று நடலாம்,
செய்யவே கூடாத நாட்கள்
பாதாள யோகினி , கரி நாள் மற்றும் மரண யோக நாட்களில் விதை விதை கக்கூடாது.
மருத்தவர் பாலாஜி கனகசபை, MBBS., MA (Astro), PhD(Yoga)
அரசு மருத்துவர்
99429 22002
கிருஷ்ணகிரி
payanulla thagaval.nandri