Skip to content

பசு சாணத்தின் பயன்கள் : மருத்துவர் பாலாஜி கனகசபை

பசுவின் சாணத்தில் 24 ஊட்டச்சத்துக்கள் (மனிதர்கள் உண்ணக்கூடியது அல்ல), அடங்கியுள்ளன , அதில் நைட்ரஜன், பொட்டாசியம், சல்பர், இரும்புசத்து, கோபால்ட் , மெக்னீசியம், காப்பர் போன்றவை உள்ளது , குறிப்பாக இந்திய ரக பசுக்களில் கால்சியம், பாஸ்பரஸ் , துத்தநாகம் போன்ற சத்துக்களும் குறிப்பிடத்தக்க அளவு உள்ளன

https://bioresourcesbioprocessing.springeropen.com/articles/10.1186/s40643-016-0105-9

சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ற அதிகமான பாக்டீரியாக்கள், பூஞ்சை மற்றும் புழுக்கள் உள்ளன
இவற்றின் நொதிக்கும் தன்மையால் இயற்கை உரமாக மாறுகின்றது.
இதில் உயிர்வளி(BioGas) மூலம் மீத்தேன் வாயு கொண்டு சமையல் எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது மிகவும் பாதுகாப்பான எரிபொருள் . ஏனெனில் இது வெடிக்காது

ஒரு கிலோ பாசும் சாணத்தில் 55% முதல் 65% வரை எரிவாயு கிடைக்கும். ஒரு பசு/மாடு 9 முதல் 15 கிலோ சாணம் ஒரு நாளைக்கு கொடுக்கிறது. இவற்றினை அதிகமாக மறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தாமல் குப்பையாக வைத்து வீணாக்குகின்றனர்.

பசு/மாடுவின் எருமட்டை சித்தமருத்துவத்தில் மருந்துகளை புடம் போடுவதற்கும், கொசுக்கள அண்டாதிருப்பதற்கும் பயன்படுகிறது, மேலும் எருமட்டை கொண்டு உணவுகள் சமைக்கலாம், இவ்வாறு சமைப்பதால் பணமும் மிச்சமாகும், அதிகமான எரிபொருளை நாம் செலவு செய்யவேண்டியதில்லை

விவசாயம் சார்ந்த தொழில்முனைவோர் எருமட்டையை ஒரு தொழிலாக செய்தால் நல்ல வருமானம் கிட்டும்

2 thoughts on “பசு சாணத்தின் பயன்கள் : மருத்துவர் பாலாஜி கனகசபை”

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj