இந்திய கால்நடை பராமரிப்புத் துறை & பால்வளம் (DAHD), பால் மற்றும் பால் உற்பத்தி தரத்தினை உயர்த்துவதன் மூலம் உலக அளவில் இந்திய பாலிற்கான சந்தையை அதிகரிக்க முடிவெடுத்துள்ளது , இதன் மூலம் பாலின் தரத்தை உறுதி செய்யும் வகையில், தரமான பால் உற்பத்தி திட்டத்தை 24.07.2019 அன்று தொடங்கியது.
2019-20 ஆம் ஆண்டில் முதல் கட்டமாக, 231 பால் உற்பத்தி நிலையங்களை வலுப்படுத்துவதற்காக “தேசியப் பால்பண்ணை மேம்பாட்டுத் திட்டம்” என்ற திட்டத்தின் கீழ், பாலில் கலப்படம் செய்யப்பட்டவர்களை கண்டறிவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது பாலில் யூரியா, மால்டோடெக்ட்ரான், அம்மோனியம் சல்பேட், டிடர்ஜென்ட், சர்க்கரை, நியூட்ரல் போன்றவை கலக்க வாய்ப்புள்ளது, இவற்றினை ஃபூரியர் இன்ஃப்ராரெட் (FOURIER) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பால் அனலைசர் (பால் கலவை மற்றும் கலப்படத்தினை துல்லியமாக கண்டறிதல் மற்றும் மதிப்பீடு செய்தல்) 30,000 லிட்டர் கொள்ளளவு மற்றும் அதற்கு மேல் உள்ள 139 பால் உற்பத்தி நிலையங்கள் மற்றும் 92 பால் உற்பத்தி நிலையங்கள் 30,000 லிட்டருக்கும் கீழ் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் 18 மாநிலங்களுக்கு மாநில மத்திய ஆய்வகம் ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பீடு ரூ 271.64 கோடியாகும். இதில் 2019-20 முதல் தவணையாக ரூ 128.56 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 2020 ல் செயல்படுத்தப்பட்டவுடன், நாட்டிலுள்ள அனைத்து கூட்டுறவு பால் பண்ணைகளும், அனைத்து நுண்ணுயிரியல் பகுப்பாய்வு கருவிகளில் துணை கொண்டு தரமான பாலை நுகர்வோர்களுக்கு வழங்க இயலும்.