எல்லா வருடங்களும் டிசம்பர் மாதம் உலக மண் வள தின விழா அனுசரிக்கப்படுகிறது. நீர் நிலைகளை தவிர மீதமுள்ள அனைத்து உயிர்களும் வாழ வளமான மண் மிக அவசியம், குறிப்பாக மனிதர்களுக்கு மண் மிகவும் அவசியம். ஆனால் உழவு மண்ணில் இராசாயனங்களை கலந்து பயிருடும்போது மண்ணின் வளம் பாழாகி குறிப்பிட்டக்காலத்திற்குப் பிறகு அம்மண்ணில் எந்த பயிரும் விலையாமல் போய்விடும் அபாயம் உள்ளது.
மண்னை பொன்னுக்கு சமம் என்று சொல்வார்கள்
அம் மண்ணை நாமும் காப்போம் என்று உறுதி எடுத்துக்கொள்வோம். ஏன் தெரியுமா.?
ஒரு சதுர அடி மண்ணிலே 5 லட்சம் கோடிக்கும் அதிகமாக நன்மை செய்யும் பல நுண்ணுயிரிகளை நாம் இழந்துவருகின்றோம், இந்த நுண்ணியிரிகள் எல்லாம் இறந்துவிட்டதால் அதன் பயன்கள் மண்ணுக்கு கிடைக்காமல் போய்விட்டன. எனவேஉலக மண் தினவிழாவில் நம் மண்ணின் வளத்தினை மேலும் நஞ்சாக்காமல் அதை காப்போம் என்று உரக்கச்சொல்வோம்