Site icon Vivasayam | விவசாயம்

விவசாயம் செய்வது எப்படி? – Part 1

venthaya keerai

venthaya keerai

அனைவருக்குமே இன்று வரும் சந்தேகம் விவசாயம் செய்வது எப்படி? விவசாயம் செய்ய வெகு எளிதான வழியில் நாம் ஆரம்பிப்போமா?

முதலில் சிறிய அளவு வெந்தயத்தினை வெந்தயக்கீரையை ஆரம்பிப்போமா?

1.ஒரு கைப்படி அளவு நீரில் கைப்பிடி அளவு வெந்தயத்தினை 6 முதல் 8 மணி நேரம் அல்லது இரவில் அறை வெப்பநிலையில் ஊற வைக்கவும். மண்ணே இல்லாமல் இந்தக்கீரைசெய்ய முடியும்

2. தொடர்ந்து அந்த விதைகளை தண்ணீர் தெளித்து தினமும் குறைந்தது 2 முதல் 3 முறை வரை வைத்திருக்கவும். காலையில் எழுந்ததும் மீண்டும் இரவில் படுக்கைக்குச் செல்லும்போதும் தண்ணீரை தெளித்துவிடவும்

3. தண்ணீர் தெளிக்கும்போது குளோரின் இல்லாத நீரை மட்டும் பயன்படுத்துங்கள், ஏனெனில் நகர நீரில் உள்ள குளோரின் மோசமான முளைப்புத் பாதையை ஏற்படுத்தலாம். 70 முதல் 80 டிகிரி F வரை ஒரு இருட்டான இடத்தில் வைத்தால் சிறப்பாக செய்யப்படுகிறது. வெப்பநிலையைப் பொருத்து முதிர்ச்சியடைந்த முளைகளை பெற 3 முதல் 7 நாள்கள் ஆகும்.

முதிர்ந்த முளைக்கீரையின் அளவு மாறுபடும். முளைக்கீரை மிகவும் நீளமாக வளர அனுமதிப்பது (4 அங்குலத்திற்கு மேல்) அவை கசப்பானதாகிவிடும்.

முயற்சித்துப்பாருங்கள்.. உங்கள் அனுபவத்தையும் பகிருங்கள்

அடுத்தப்பாகம் இன்னொரு பயிருடன் வரும்..

வசுப்பிரதா

Exit mobile version