அர்த்த சாஸ்த்ரத்தில் மதுரை பற்றிய குறிப்பில் பருத்தி ஆடைகளைப் பற்றிய அலசலில் கௌடல்யர் மதுரையை முதலில் குறிப்பிடுகிறார்.
மாது⁴ரம் ஆபராந்தகம் காலிங்க³ம் காஶிகம் வாங்க³கம் வாத்ஸகம் மாஹிஷகம் ச கார்பாஸிகம் ஶ்ரேஷ்ட²ம் .
மதுரை, கொங்காண பகுதி, கலிங்கம், காசி, வங்கம், வத்ஸநாடு, மஹிஷநாடு ஆகியவற்றில் உருவாகும் பருத்தியாடைகள் மிகச் சிறந்தவை என்கிறார். மதுரையைப் பற்றிய பழைமையான குறிப்புகளில் இது முக்யமானது. மூன்றாம் ஸோமேச்வரனின் மானஸோல்லாஸமும் பருத்தியாடைகளுக்கு மதுரையைக் குறிப்பிடுவதும் குறிப்பிடத்தக்கது. மதுரை ஈராயிரம் வருடங்களாகப் பருத்திநெசவுக்குப் பெயர் பெற்றது
சங்கர நாராயணன்
வரலாற்று ஆய்வாளர்