மத்திய இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்., 1ல், தாக்கல் செய்யப்பட்டது.அதில், 2 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள, 12 கோடி விவசாயிகளுக்கு, ஆண்டு தோறும், மூன்று தவணைகளில், 6,000 வழங்கப் படும் என, அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை, பிரதமர் மோடி, கடந்த பிப்., 28ல் துவக்கி வைத்தார். இதுவரை, 3.11 கோடி விவசாயிகளுக்கு முதல் தவணையாக, 2,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 2.75 கோடி விவசாயிகளுக்கு, இரண்டு தவணை நிதியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று நடந்த மத்திய அமைச்ச ரவை கூட்டத்தில், இந்த திட்டத்தை, அனைத்து விவசாயிகளுக்கும் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.
இதன் மூலம், 14.5 கோடி விவசாயிகள் பலன் அடைவர் என்றும், அரசுக்கு, ஆண்டுக்கு, ரூ.87 ஆயிரம் கோடி செலவாகும் என, கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும், 10 ஆயிரத்து, ரூ.774 கோடிதிட்டத்தை, விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்தார்.
விவசாயிகளுக்கு 1 லட்சம் ரூபாய் வரை, வட்டியில்லாமல் கடன் வழங்கும் திட்டத்தையும், அமைச்சர் தோமர் தாக்கல் செய்தார். விவசாயி களுக்கான ஓய்வுதிய திட்டத்தின் கீழ், 18 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகள் சேர்க்கப்படுவர் என, அவர் தெரிவித்தார்.
சிறு வர்த்தகர்கள், சுயவேலை செய்பவர்கள், கூலி தொழிலாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம், இந்த கூட்டத்தில் அறிமுகப்படுத்தப் பட்டது. ‘இந்த திட்டத்தின் கீழ், 18 – 40 வயதுக் குட்பட்டவர்கள் யாரும் சேரலாம். ‘இவர்கள், தினமும், 2 ரூபாய் செலுத்தினால் போதும். 60 வயது முடிந்த பின், இவர்களுக்கு, மாதம் குறைந்தது, 3,000 ரூபாய் ஓய்வூதியமாக வழங் கப்படும்’ என, அமைச்சர் தோமர் தெரிவித்தார்.