தமிழகத்தில் அழிந்துவரும் 160ற்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து அவற்றை அழிவில் இருந்து தடுத்து ஆண்டுதோறும் அதற்கான தேசிய நெல் திருவிழாவை 2006ஆம் ஆண்டுமுதல் திருத்துறைப்பூண்டியில் நடத்தி வந்தார் கட்டிமேடு கிராமத்தை சேர்ந்த ஜெயராமன். அதனால் அவருக்கு நெல் ஜெயராமன் என்ற பட்டத்தினை வழங்கினார் நம்மாழ்வார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடும் அவதிப்படு வந்த நெல் ஜெயராமன் அவர்கள் கடந்த வருடம் டிசம்பர் 6ஆம் தேதி காலமானார். அவரது வழியில் இந்த ஆண்டும் நெல் திருவிழாவை நடத்த முடிவு செய்துள்ளது அவர் உருவாக்கிய தி கிரியேட் அமைப்பு. இந்த வருடம் ஜூன் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள ஏ.ஆர்.வி தனலெட்சுமி அரங்கில் நெல் திருவிழா நடைபெற உள்ளது. பேரணி கலை நிகழ்ச்சிகள், கண்காட்சி, கருத்தரங்கம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எ.செந்தமிழ் இளம் அறிவியல் வேளாண்மை,
அங்கக உழவன்.