விக்கிரவாண்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் புரட்டாசி மாதம் முதல் கார்த்திகை மாதம் வரை உள்ள பட்டத்தில் சம்பா நெல்பயிர் சாகுபாடி செய்துகொண்டிருந்த விவசாயிகள் இந்த ஆண்டு போதிய அளவில் பருவ மழை பெய்யாமல் பொய்த்து போனதாலும், கிணறு மற்றும் போர்களில் தண்ணீர் மட்டம் குறைந்து போனதால் விவசாயிகள் சம்பா நெல் பயிரிடாமல், காய்கறி சாகுபடி செய்வதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர் .
விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரம், சிறுவள்ளிக்குப்பம் , வாக்கூர், பகண்டை கிராமங்களில் குறைந்த அளவு தண்ணீரில் விளையக் கூடிய பயிராகவும், பணப்பயிரான காலிபிளவர் சாகுபடி செய்துள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன் பெய்த மழையினால் விவசாயிகள் பயிரிட்டிருந்த காலிபிளவர் நன்கு வளர்ந்துள்ளது மகிழ்ச்சியை அளித்துள்ளது.
பயிர் நன்கு செழித்துள்ளதால் பெரிய அளவில் பூ பூத்து காலிபிளவர் நல்ல மகசூலை தரும் என எண்ணியுள்ளனர்.மலை பிரதேசங்களில் க விளைவிக்கப்பட்ட காலிபிளவர், முட்டை கோஸ் பயிர்கள் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் சாகுபடி செய்து விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தி வருவது குறிப்பிடதக்கது.
மாத்தி யோசித்து விவசாயத்தினை மீட்போம் மக்களே!