கொங்கணாபுரத்திலுள்ள, திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கிளையில், நிலக்கடலை ஏலம், நேற்று நடந்தது. சுற்றுவட்டார பகுதி விவசாயிகள், நிலக்கடலையை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஈரப்பதமுடைய, 60 கிலோ மூட்டை, 1,190 முதல், 1,449 ரூபாய், உலர்ந்த மூட்டை, 1,780 முதல், 2,489 ரூபாய் வரை விற்பனையானது. 1,505 மூட்டைகள் மூலம், 15 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
கொங்கணாபுரம் நிலக்கடலை ஏலம்!
