Skip to content

கவுதாரி வளர்ப்பவர்களுக்கு அக்ரிசக்தி வழங்குகிறது நிதியுதவி

Grey francolin

அக்ரிசக்தியின் யோகம் என்ற புதிய திட்டத்தின் கீழ் புதிய தொழில்முனைவோர்களை அக்ரிசக்தி ஊக்குவிக்கிறது.

அக்ரிசக்தியின் சார்பில் விவசாயம் சார்ந்த பல முன்னெடுப்புகள் செய்யப்பட்டுவருகின்றன. விழுது மாணவ பத்திரிக்கையாளர்கள் திட்டம், டயல் பார் அக்ரி, உணவு சத்து விபரங்கள் என பல ஆராய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்நிலையில் புதியதாக யோகம் என்ற திட்டத்தினை புதியதாக ஆரம்பிக்கின்றோம்

கவுதாரி

விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் உபயோகம், நகர மயமாக்கல் போன்றவற்றால் கவுதாரி பறவை அழிந்துவரும் பறவைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு மூலம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பறவைகளை மீட்க அக்ரிசக்தி குழு முன்னெடுப்பினை மேற்கொண்டு உள்ளது. கவுதாரியை யாரேனும் இயற்கையான முறையில் வளர்த்து கொடுக்க முன்வந்தால் அக்ரிசக்தி குழு அவர்களுக்கு நிதி உதவி கொடுத்து இப்பறவைகளை பாதுகாப்பதுடன் தொழில்முனைவுகளை மேற்கொள்ள முடியும். அழிந்து வரும் எந்த பறவைகளையும் காப்பாற்றிட தொழில்முனைவு மிக அவசியமாகிறது. எனவேதான் அக்ரிசக்தி இந்த முன்னெடுப்பினை முன்னெடுக்கிறது…

 

ஆர்வமுள்ளவர்கள் சரியான திட்டவிபரங்களுக்கு editor.vivasayam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம்

6 thoughts on “கவுதாரி வளர்ப்பவர்களுக்கு அக்ரிசக்தி வழங்குகிறது நிதியுதவி”

  1. சரவணராஜ். ரா

    கவுதாரி வளர்ப்பு முறை மற்றும் கிடைக்கும் இடம் பற்றி தெரிவிக்கவும். நான் இந்த வளர்ப்பு முறையில் ஆர்வமாக உள்ளேன்.

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj