ஆப்கானிஸ்தான் நாட்டின் விவசாயத் துறையில் முதலீடு செய்ய இந்தியத் தொழிலபதிர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார், அந்த நாட்டின் விவசாயத்துறை துணை அமைச்சர் நஸீர் அகமது. கால்நடை வளர்ப்பும் விவசாயமும்தான் ஆப்கானிஸ்தான் நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு. இத்துறையில் ஏற்றுமதியை அதிகரிப்பது, அந்த நாட்டுக்கு வலு சேர்க்கும். அதற்காக இந்தியத் தொழிலதிபர்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்க ஆப்கானிஸ்தான் தயாராக இருக்கிறது.
ஆப்பிள், திராட்சை, மாதுளை உள்ளிட்ட பழங்களுக்கும் உலர் பழங்களுக்கும் ஆப்கானிஸ்தான் உலகப் புகழ்பெற்றது. அவற்றுக்கு உலகம் முழுவதும் தேவை அதிகமாக உள்ளதால், அதைப் பயன்படுத்திக் கொள்ள முன்வரும் அரசின் முயற்சி பாராட்டுதலுக்குரியது.
முன்னதாக ஆப்கானிஸ்தானின் பொருளாதாரத் துறை அதிகாரிகளுக்கு, இந்தியாவில் ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள், பெண்கள் மேம்பாடு, விவசாயம், நீர் மேலாண்மை போன்ற திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதைப் பார்வையிடவும், இத்துறைகளில் பயிற்சி பெறவும், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 25 பொருளாதாரத்துறை அதிகாரிகள் இந்தியா வந்து பயிற்சி பெற்று சென்றுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் வட பகுதியில் இந்திய உதவியுடன் கட்டப்பட்ட அணையை ஆப்கன் அதிபரும், இந்திய பிரதமரும் துவக்கி வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இருநாட்டு விவசாய நல்லுறவை வளர்க்கும் விதத்தில் அரசாங்கம் செயல்பட்டு வருகின்றன.