அரிசி மற்றும் கோதுமை பயிரிடுவதன் மூலம் ஏக்கருக்கு 30,000 மட்டுமே விவசாயிகளால் ஈட்ட முடியும் என்ற நிலைமையை விவசாயிகள் மூலிகைச் செடிகளை பயிரிடுவதன் மூலம் ஏக்கருக்கு 3 லட்ச ரூபாய் ஈட்ட முடியும் என்ற செய்தி நம் விவசாயிகளிடையே கொண்டு சேர்க்கவேண்டியது நம் அனைவரின் அவசியமாகும். மூலிகைச் செடி என்பது கீரையில் ஆரம்பித்து நெல்லிக்காய், கடுக்காய், ஆவாரம், சுக்கு, மிளகு, திப்பிலி என பலவிதமான மூலிகைகள் நம் பாரம்பரிய மூலிகைகளை ஆராய்ந்தாலே போதுமானது. அதோடு மட்டுமல்ல நம் மூலிகைகளை பூச்சித்தாக்குதல், பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும்ப யன்படுத்த இயலும். எனவே இப்போதாவது நம் விவசாயிகள் நம் பாரம்பரியத்தினை நோக்கி பயணிப்பது அவசியமாகிறது,
மூலிகைச்செடிகளை உற்பத்தி செய்தால் யார் வாங்குவார்கள் என்ற கேள்வி எழலாம். இந்தியாவில் டாபர், ஹிமாலயா, பதஞ்சலி, ஹமாம், டாடா என பல நிறுவனங்கள் தங்கள் பொருட்களில் மேற்கண்ட மூலிகைகளை சேர்த்து வருகின்றனர். எனவே அவர்களே இப்பொருட்களை வாங்கிக்கொள்வார்கள்.
நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் இந்தியாவில் மூலிகை பொருட்களுக்கான சந்தைமதிப்பு 5000 கோடி ரூபாய். ஆண்டுதோறும் இத்தொகை இரட்டிபாகக்கூட வாய்ப்பிருக்கு. எனவே எல்லாருமே ஒரே மூலிகை பயிர் செய்யாமல் ஒருவருக்கொருவர் பேசி பல மூலிகைகளை பயிர் செய்து கூட்டாக விற்கலாம்.