மிளகுப் பயிரைத் தாக்கும் நோய்களில் மிக முக்கியமானது வாடல் நோய் ஆகும். இது ஒரு வகை பூசண நோய். முதலில் இலையின் முனையிலிருந்து வாடத்தொடங்கும். நன்கு வளர்ந்த மிளகுக் கொடி திடீரென பட்டுப்போய் விடும். இது ஜூலை – ஆகஸ்ட் மாதத்தில் பெய்யும் தென்மேற்குப் பருவக் காற்று மழையினால் அதிகம் பரவுகின்றது. நோய் தாக்கிய 10 அல்லது 15 நாட்களுக்குள் மிளகுக் கொடி இலை அனைத்தும் உதிர்ந்து இறந்துவிடும். தூர் பாகத்திற்கு மிக அருகில் இருக்கும் தளிர் மற்றும் முதிர்ந்த இலைகளில் கருமையாக மாறிவிடும். தூர் பாககம் முதலில் அழுக ஆரம்பித்து பின் வேர்பாகம் முழுவதும் அழுகி செடி இறந்துவிடும்.
மேலாண்மை முறைகள்
மழைக்காலத்தில் இந்நோய் வேகமாகப் பரவுவதால் நல்ல வடிகால் வசதி செய்து, நோயின் தாக்கத்ததைக் குறைக்கலாம். நாற்றங்காலில் ஒரு கிலோ மண் கலவைக்கு 1 கிராம் ட்ரைக்கோடெர்மா விரிடி என்ற விகிதத்தில் கலந்து பிறகு நடவேண்டும். கொடி ஒன்றிற்கு அரைக்கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும். இலை வழியாக ஒரு சதவிகித சூடோமோனோஸ் புளுரசன்ஸ் அளிக்கவேண்டும்.தடுப்பு முறை
நாற்றங்காலில் ஒரு கிலோ மண்கலவைக்கு 1 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி என்ற அளவில் கலந்து விடவேண்டும்.
நடவு வயலில்
வேப்பம் புண்ணாக்கு ½ கிலோ + போர்டாக்ஸ் கலவையை செடியின் அடிப்பாகத்திலிருந்து 1 மீட்டர் உயரம் வரை பூச வேண்டும்.
செடிக்கு டிரைக்கோடெர்மா விரிடி 20 கிராம் + தொழு உரம் 50கிலோ என்ற அளவில் கலந்து கொடுக்க வேண்டும்.
எ.செந்தமிழ்,
இளம் அறிவியல் வேளாண்மை.
அக்ரி சக்தியின் விழுது பத்திரிக்கையாளர்