மாம்பழத்தில் பழ ஈக்கள் அதிக சேதத்தை ஏற்படுத்துகின்றன. இத்தாக்குதலால் மா பயிரிடும் விவசாயிகளுக்கு மட்டுமல்லாது நுகர்வோருக்கும் அதிக இழப்பு ஏற்படுகிறது. பழத்தின் உட்பகுதியிருக்கும் முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் சதைப்பகுதியை தின்று அழிக்கின்றன. இதனால்
தோலின் மேற்பரப்பில் பழுப்புநிறத்திட்டுக்கள் காணப்படும்.
சேதம் அதிகமாகும் நிலையில் பழங்கள் அழுகி பழுப்பு நிறத் திரவம் வெளிவரும். இதனால்
சேதமடைந்த பழங்கள் அழுகி கீழே விழுந்துவிடுகின்றன. இதன் புழுவானது வெண்ணிறத்துடனும், கால்கள் இல்லாமலும் தலை பகுதி அகன்றும் காணப்படும். பழ ஈக்கள் ஆரஞ்சு அல்லது பழுப்பு கலந்த சிவப்பு நிறத்தில் இருக்கும். கண்ணாடி போன்ற இறக்கைகளைக் கொண்டிருக்கும்.
இதனை மேலாண்மை செய்ய பாதிக்கப்பட்ட பழங்களை பறித்து அகற்றி விட வேண்டும். மரத்தைச் சுற்றி உழவு செய்து பழ ஈயின் கூட்டுப்புழுக்களை அழிக்கலாம். மெத்தில் யூஜீனால் கவர்ச்சிப் பொறியை ஹெக்டேர்க்கு பத்து வீதம் வைத்து பழ ஈக்களை கவர்ந்து அழிக்கலாம். செண்டுமல்லிப்பூவிலிருந்து எடுக்கப்படும்
பைரித்ரத்தை தண்ணீருடன் கலந்து தெளிக்கலாம். ஒப்பியஸ் காட்பன்சேட்டஸ் மற்றும் ஸ்பாலஞ்சியா பிலிப்பைன்ஸ் போன்ற புழு ஒட்டுண்ணிகளைப் பயன்படுத்தி புழு ஈக்களின் தாக்குதலை தடுக்கலாம்.
எ.செந்தமிழ்,
இளம் அறிவியல் வேளாண்மை,
அக்ரி சக்தியின் விழுது பத்திரிக்கையாளர்.