கேரளாவில் பெய்த கனமழை எதிரொலியால் டெல்டா மாவட்டங்களில் வைக்கோல் வாங்குவதற்கு கேரளாவில் இருந்து வியாபாரிகள் வரவில்லை. இதனால் வைக்கோல் வாங்க யாரும் வராததல் டெல்டா விவசாயிகள் தவித்து வருகின்றனர்.கேரளாவில் உள்ள கால்நடைகளுக்கு தேவையான வைக்கோல், தமிழகத்தில் இருந்து கேரளவியாபாரிகள் கொண்டு செல்வது வாடிக்கையாகும். கேரளாவுக்கு வைக்கோல் அனுப்பி வைக்கும் வியாபாரிகள், அறுவடை நடைபெறும் வயலுக்கு சென்று ஒரு ஏக்கர் வயலில் உள்ள வைக்கோலை எடுத்து கொள்ள ₹1,500 கொடுத்து விட்டு இயந்திரம் உதவியுடன் வைக்கோலை சேகரித்து லாரியில் ஏற்றி செல்வர்.இந்தாண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு கடந்த ஒரு மாதமாக அறுவடை நடந்து வருகிறது. சென்றதாண்டு வரை கேரளா வியாபாரிகள், காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏக்கர் ஒன்றுக்கு ₹1,500 வரை கொடுத்து வைக்கோலை வாங்கி சென்றனர்.
தேக்கமடைந்துள்ள வைக்கோலை விவசாயிகள் அறுவடையான வயலிலேயே ஆட்களை வைத்து வைக்கோலை எருவுக்காக பரப்பி விடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வைக்கோலை மக்க வைத்து மீண்டும் எருவாக மாற்றும் வேலை நடக்கிறது.