நாகை மாவட்டம் சீர்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சார்பில் இந்த ஆண்டுக்கான நெல் திருவிழா நடைப்பெற்று வருகிறது. இத்திருவிழாவின் தொடக்கமாக பேரணி தமிழிசை மூவர் மணி மண்டபம் புதிய பேருந்து நிலையம் வழியாக எல்.எம்.சி பள்ளி வளாகத்தை வந்தடைந்தது. நாட்டியாஞ்சலி தமிழ்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது.
துவக்க நாளாகிய இன்று நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், தமிழக கைத்தறி மற்றும் நூல் துணி துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன், இயற்கை வேளாண் வல்லுனர்கள் அரச்சலூர் செல்வம், பாமயன், வேளாண் துறை அலுவலர்கள், விவசாயிகள், பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பலர் விழாவில் கலந்துக்கொண்டனர்.
விழாவில் பாரம்பரிய நெல் ரகங்கள், இயற்கை இடுபொருட்கள், நாட்டுரக விதைகள், வேளாண் கருவிகள் குறித்து பல அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜெயின் இரிகேசன் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சொட்டு நீர்ப்பாசனம் மூலம் நெல் பயிரிடும் முறை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. விழா ஜூலை 21, 22 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. விருப்பமுள்ளோர்க்கு விழாவில் 2 கிலோ பாரம்பரிய நெல் கொடுக்கப்பட உள்ளது.
நாட்டு நெல்லு கிடைக்குமா
கிடைக்கும்