கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த வெங்கடாம்பேட்டையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கி ஊரக வேளாண் பணி அனுபவம் குறித்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதன் துவக்கவிழா கடந்த புதன்கிழமை மாலை 6 மணியளவில் வெங்கடாம்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைப்பெற்றது. இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல வேளாண் விரிவுரையாளர் திரு. சு.ஜெய்வேலு அவர்களும் தாவர நோயில்துறை வல்லுனர் திரு சஞ்சைகாந்தி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
விழாவில் ஊர் பெரியவர்கள், விவசாயிகள், ஊர்ப்பொது மக்கள் கலந்துக்கொண்டனர். விழாவில் இயற்கை வேளாண்மையின் அவசியம் குறித்து சிறப்பு விருந்தினர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
விழாவில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.