நாடு முழுவதும் சுமார் 5000விவசாயஉற்பத்திய நிறுவங்களை உருவாக்கிட நபார்டு இலக்கு நிர்ணயித்துள்ளது.
2018 இல் 2000 மேல் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் விவசாயப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 507 விவசாய உற்பத்தி நிறுவனங்கள் மொத்த உள்ளீடு கொள்முதல் மற்றும் விநியோகம் ஆகியவற்றிலும், 223 விவசாய உற்பத்தி நிறுவனங்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்பனையில் ஈடுபடுகின்றனர். வேளாண் பதப்படுத்துதல், அரசு கொள்முதல் திட்டம், பால்பண்ணை, இயற்கை விவசாயம், விதை உற்பத்தி மற்றும் விற்பனை, மீன்வளம் மற்றும் இதர தொழில் சார்ந்த செயல்பாடுகளிலும் விவசாய உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன.
இந்நிலையில் மேலும் 5000 விவசாய உற்பத்தி நிறுவனங்களை அமைத்திட இருப்பது சிறந்த முயற்சி என்றாலும் நமது அத்தியாவசியான தேவையான நீர் மேலாண்மை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நம் மக்களிடையே குறைந்துவருகிறது. அதற்கும் நபார்டு வங்கி முயற்சி செய்யவேண்டும்