கிருஷ்ணகிரி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அணையின் தற்காலிக மதகை மாற்றி, புதிய மதகு அமைக்கும் பணி நாளை துவங்குகிறது. அணையிலிருந்து, ஆற்றில் தண்ணீர் அதிகளவில் திறந்துவிடப்பட்டுள்ளது. 32 அடி வரை தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு, தற்காலிக மதகை அகற்றும் பணிகள் தொடங்கவுள்ளது. அதன்பின், புதிய மதகு பொருத்தும் பணி தொடங்கப்படும். ஆற்றில் அதிகளவில் தண்ணீர் செல்வதால், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்ட கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ஆற்றைக் கடக்கவோ, ஆற்றில் குளிக்கவோ கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.