2019ம் ஆண்டு முதல் தமிழகத்தில் நெகிழி பயன்படுத்தவும், உற்பத்தி செய்யவும் தமிழக அரசு தடை செய்துள்ளது. இது காலம் கடந்த முயற்சி என்றாலும் நெகிழி அளவுக்கு ஏற்ற அதே சமயம் விலை குறைவான பொருள்களை நாம் உருவாக்கிட வேண்டியது மிக அவசியம், ஏற்கனவே கோணிப்பை, மஞ்சள் பைகள் தான் நம்முடைய பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்திக்கொண்டிருந்தோம். இந்நிலையில் நெகிழிக்கு மாற்றாக கோரைப் புல்லை பயன்படுத்தமுடியுமா என்று விவசாயம் குழு ஆராய்ந்து வருகிறது.
கோரைப் புல்களை கொண்டு நாம் பலவிதமான கைப் பைகள், பெரிய அளவிலான பைகளை உருவாக்க முடியும், பல நாடுகளில் கோரைப்புல்லைக் கொண்டு சிறிய பைகள் எல்லாம் பயன்பாட்டில் உள்ளது. எனவே இந்த கோரைப்புல்லைக்கொண்டு வேறு என்ன விதமான பொருள்களை உருவாக்கமுடியும் என்று ஆராய வேண்டியது மிக அவசியமாகிறது.
கோரை புல் பாய்களுக்கு மட்டும் பயன்படுத்தப்படாமல் . எனவே கோரைப்புல்லை நெகிழிக்கு மாற்றாக கொண்டுவர முடியுமா என்று நாம் முயற்சிக்கலாம். உங்கள் ஆலோசனைகளை வரவேற்கின்றோம்
செல்வமுரளி