கலப்படம் காரணமாக தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய்களுக்கு கேரளா திடீர் தடை விதித்துள்ளது. சமையலுக்கு பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெய்களில் கலப்படம் இருப்பதாகவும், இவற்றின் உற்பத்தி, கொள்முதல், விநியோகம், விற்பனை ஆகியற்றை தடை செய்து 45 நிறுவனங்களின் எண்ணெய்களுக்கு கேரள மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 2006ம் ஆண்டு உணவு பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவை பாலக்காடு, கோழிக்கோடு, எர்ணாகுளம் மற்றும் தமிழகத்தில் பொள்ளாச்சி, கோவை, நாமக்கல், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தயார் செய்யப்பட்டு கேரளா கொண்டு செல்லப்படுபவை ஆகும்.
இந்த எண்ணெய் வகைகளின் மாதிரிகளை பல்வேறு இடங்களில் இருந்து சேகரித்த நிலையில் அவற்றுக்கு நடத்தப்பட்ட சோதனை முடிவுகள் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனில் தமிழகத்தல் விற்பனை செய்யப்படும் தேங்காய் எண்ணெய்களிலும் கலப்படம் உள்ளதா என்று விசாரிக்க தமிழக அரசு உத்தரவிடவேண்டும்