அக்னி நட்சத்திரம் ஆரம்பித்தப் பிறகு வெயில் வெளுத்து வாங்கி வந்தது. வெயிலுக்கு தாக்குபிடிக்க முடியாமல், வெயிலில் நடமாடுவோர் உடல் சூட்டை தணிக்கும் வகையில் பழரசம், லெமன் சோடா, ஜூஸ், நீர் மோர், இளநீர் போன்றவற்றை அருந்தி வருகின்றனர். இதனால், எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்துள்ளதால், விலையும் கிலோவிற்கு, 70 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. , 50க்கு விற்ற எலுமிச்சை தற்போது 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வாலை இலை
அக்னிநட்சத்திர வெயிலுக்கு, தாக்குபிடிக்க முடியாமல், தோட்டத்திலேயே வாழையிலை, கருகியும், சுருங்கியும் விடுகிறது. விளைச்சலும் பாதிக்கிறது. இதனால், விலை உயர்ந்துள்ளதாக வாழையிலை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
அரிசி
முதல் தரமான, வெள்ளை பொன்னி, பழைய அரிசி, கடந்த மாதம், 56 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது, கிலோவுக்கு, நான்கு ரூபாய் குறைந்து, 52 ரூபாய்க்கும், புதுசு, 46 ரூபாய்க்கும், அதேபோல், பி.பி.டி., முதல் தர அரிசி, 48க்கு விற்பனை செய்ததை, 44 ரூபாய்க்கும் விற்பனை செய்துவருகின்றனர்