சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் 11-வது நாளாக போராட்டம்!!!
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு இன்று 112-வது நாளாக வேலை நிறுத்தம் பலகோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு.
இதனால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள் மூடப்பட்டுள்ளது, இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று உள்ளனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தின் காரணமாக பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள் உள்ளது. இதில் நேரிடையாகவும், விசைத்தறியோடு தொடர்புடைய பாவு போடுதல், கண்டு போடுதல், சாயம் போடுதல் உள்ளிட்ட தொழில்களில் மறைமுகமாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு உற்பத்யாகும் துணி வகைகள் தமிழகம் ,வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதால் ஒரு நாளுக்கு சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் நடந்து வருகிறது. விசைத்தறி தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுக்கு ஒருமுறை கூலி உயர்வு வழங்கப்படுவது வழக்கம். தற்போதைய கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த 28-ந்தேதியுடன் முடிவடைந்தது. எனவே 60 சதவீத கூலி உயர்வு, தேசிய விடுமுறை சம்பளம் 300 ரூபாய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று 11வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில் விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை மாவட்ட நிர்வாகம், தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் விரைந்து முடிவுக்கு கொண்டுவரவேண்டும் , இல்லை என்றால் போராட்டத்தை தீவிரப் படுத்தும் வகையில் அடுத்தகட்டமாக உண்ணாவிரதம் , மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.
இன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததால், சாலை மறியலைக் கைவிட்டு தொழிலாளர்கள் பேரணியாக சென்றனர்.