Skip to content

பூச்சிக்கொல்லிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தல்

நாக்பூர்: மகாராஷ்டிராவில் விவசாய நெருக்கடியை சமாளிக்க அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படை, சில நச்சு பூச்சிக்கொல்லிகள் தடை செய்யும் மாநில அரசின் யோசனையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு பூச்சிக்கொல்லி நச்சு காரணமாக விதர்பா பிராந்தியத்தில் விவசாயிகள் இறப்புக்களையடுத்து  கிஷோர் திவாரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் , பூச்சிக்கொல்லிகளுக்கு தடைக்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்

இந்த மனுவில், இந்தியாவில் பயன்படுத்தப்படும் குறைந்தது 93 பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்ற நாடுகளால் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அவற்றை உடனடியாக தடை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த ஆண்டு இந்த பூச்சிக்கொல்லிகளை தெளிக்கும் போது அதிக விஷத் தன்மையால் மகராஷ்டிர மாநிலத்தில் 60 க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ளதும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டதும் குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj