இந்தியா முழுவதும் 2016ல் வருடத்திற்கு 6,351 விவசாயத்துறை சார்ந்தோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று சமீபத்திய உள்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய தகவல்களின் அடிப்படையில் விவசாயத்துறை சார்ந்த தற்கொலைகள் வெகுவாக குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. 2015 ஆம் ஆண்டு 8007 பேர் ஆக இருந்த விவசாயிகள் தற்கொலை, 2016ல் 6351 தற்கொலையாக குறைந்துள்ளது. அதே சமயம் 2013 ல் 11772 தற்கொலை செய்துள்ளனர் என்பது வருந்தத்தக்கது.
உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) என்ற பிரிவின் தற்காலிக தரவுகளின் அடிப்படையில் இத்தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் விவசாயத்துறையில் 2013ல் 104 ஆக இருந்த தற்கொலைகள் 2014ல் மொத்தமாக 895 நபர்களும் , 2015ல் விவசாயத்துறையில் மொத்தமாக 606 ஆகவும், 2016ல் விவசாயத்துறையில் மொத்தமாக 381 பேர் தற்கொலை செய்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலயே அதிகமாக மகாராஷ்டிரமாநிலத்தில்தான் அதிகமான விவசாய தற்கொலைகள் நடந்துள்ளது. விவசாயத்தி்ற்கு போன நம் இந்திய நாட்டில் விவசாயத்திற்கு நாள்தோறும் 17 பேர் இறப்பு என்பது மிகவும் கவனிக்கத்தக்கது. அரசாங்கம் முயற்சி ஒருபுறம் என்றாலும் தனி நபர்களின் பங்களிப்புகளும் விவசாயத்துறைக்கு மிகவும் தேவை.
இணைப்பு
http://164.100.47.190/loksabhaquestions/annex/14/AU4111.pdf