Site icon Vivasayam | விவசாயம்

நஞ்சில்லா விவசாயத்தின் அங்கக சந்தையின் மதிப்பு 10,000 கோடி!

நஞ்சில்லா விவசாயம் மூலம் உற்பத்தி செய்யப்படும் அங்கக உணவுச்சந்தையின் மதிப்பு . 2020ல் 10 ஆயிரம் கோடியாக இருக்கும் என்கிறார் . 24 மந்த்ரா ஆர்கானிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என். பாலசுப்பிரமணியன் . இந்தியாவில் உள்ள மிகப் பெரிய அங்கக உணவு நிறுவனங்களில் ஒன்றாக . 24 மந்த்ரா ஆர்கானிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு பாலசுப்பிரமணியனுடன் ஒரு நேர்காணல்

24 மந்த்ரா ஆர்கானிக் நிறுவனத்தின் நோக்கம் என்ன?

சிறு, குறு விவசாயிகளுக்கு சிறந்த வாழ்வாதாரம் கொடுப்பதோடு நுகர்வோருக்கு பாதுகாப்பான உணவை வழங்கி, சுற்றுச்சூழலை மேம்படுத்துவதே எங்களது நோக்கம். இந்தியாவின் 15 மாநிலங்களில் உள்ள 45,000 க்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் நேரடியாக பணியாற்றுகிறோம். ,90 க்கும் மேற்பட்ட விவசாயப்பொருட்களை நிர்வகித்து வருகிறோம். அதோடு 200 கூட்டாளிகள் உதவியோடு, இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி பொருட்கள் பயன்படுத்தாமல் உணவு உற்பத்தி செய்ய உதவி செய்து வருகின்றனர். அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் இந்திய நெறிமுறைகளை எதிர்கொள்ள, அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச நிறுவனங்களால், சான்று பெறுகின்றோம். அதன்பின்னர் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் , இந்தியா முழுவதும் உள்ள 25 சேமிப்பகங்களில் இருந்து 21 நாடுகளில் உள்ள சில்லறை அங்காடிகள் மூலம் இந்த பொருள் எங்களது வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். அமெரிக்காவில், 800 க்கும் மேற்பட்ட இந்தியக் கடைகளிலும், Kroger ன் 600 கடைகளிலும் கிடைக்கும்.

எங்கள் நிறுவனத்தின் விற்பனையில் விவசாயி மற்ற சந்தைகளை விட நபர் 10-20% விலை (பயிர்கள் மற்றும் அமைவிடம் பொறுத்து) அதிகம்சம்பாதிக்கிறார்.

இந்தியாவில் நஞ்சில்லா விவசாயம் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவுக்கான சந்தை எப்படி இருக்கிறது?

வாடிக்கையாளரகளின் ஆர்வம் ஆரோக்கியமான உணவை நோக்கி மாறுகிறது… கடந்த சில ஆண்டுகளாக இந்த மாற்றம் ஏற்பட்டுவருகிறது. சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய அம்சங்கள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில் வருவதும் குறிப்பிடத்தக்கது. எனவே நிச்சயம் ஆரோக்கியத்திற்கான சந்தை ஆரோக்கியமாகவே இருக்கிறது.

நஞ்சில்லா விவசாயத்திற்கான சான்றிதழ் பெறுவதற்கான  விதி முறைகள் கடுமையாக இருக்கிறதே? இந்த சவாலை எப்படி சமாளிக்கிறீர்கள்?

நஞ்சில்லா விவசாயிகளை அடையாளம் கண்டு, அதிக நேரம் செலவழித்து, பயிற்சி அளிக்கும் எங்கள் குழு சான்றிதழ் பெறும் இந்த சவாலை குறைக்கிறது. நிலத்தடி நீர்க் குறைதல், மண் நிலைகள் காரணமாக ஒரே உற்பத்தி அளவை பராமரித்தல், அதிக உரங்களை பயன்படுத்துவதாக விவசாயிகள் பலர் அறிவர். எனவே, அவர்கள் தங்கள் விவசாய நடைமுறைகளை மாற்றிக் கொள்ளும் வரை, எங்கள் குழு அவர்களுக்கு உதவும். அதற்கான செலவுகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்

சந்தை வளரும் போது சாதாரண மனிதனுக்கு இயற்கை உணவு மலிவான, மலிவு என்று பார்ப்போமா?

எங்கள் நிறுவனத்தில் விலை சற்று அதிகம்தான் அதற்கான காரணம்

1). விவசாயிகளுக்கு வழங்கப்படும் கூடுதல் விலை,
2. கலப்படம் இல்லாமல் கொடுத்தல்,
3. உயர் தரஉணவு பாதுகாப்பு செயலாக்கம் மற்றும் உணவுகளை பராமரித்தல் அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சில்லரை விற்பனையாளர்களுக்கு கூடுதலாக 10% கூடுதல் தொகை மார்ஜின்.
மேற்கண்ட செலவினங்கள்தான் விலையை நிர்ணயிக்கிறது.

இந்தியாவில் நஞ்சில்லா விவசாயம் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலை அடுத்த 5 ஆண்டுகளுக்கு சாதாரண உணவுகளின் விலையை விட 40% முதல் 50% அதிகரித்துத்தான் காணப்படும்.. ஆனால் அமெரிக்கா போன்ற பெரும் சந்தைகளில் இந்த விலை வேறு பாடு 30% ஆக இருக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் நஞ்சில்லா விவசாயம் மூலம் உற்பத்தி செய்யத உணவுப்பொருட்களின் சந்தை 20-25% வரை வளரும் என்றும் எதிர்பார்க்கிறோம்.எங்கள் நோக்கம் 2020 ல் 10 லட்சம் குடும்பங்களுக்கு நஞ்சில்லா பொருட்களை விற்பனை செய்ய 5 லட்சம் ஏக்கர்களில் ஒரு லட்சம் விவசாயிகளை கொண்டு 10 லட்சம் குடும்பங்களுக்கு நஞ்சில்லா பொருட்களை விற்பனை செய்வதே எங்கள் இலக்கு.

நஞ்சில்லா உணவு வணிகத்தில்,   விவசாயிகள், சந்தைப்படுத்துதல்  அல்லது கட்டுப்பாட்டு அமைப்பு இம்மூன்றில் எவற்றில் சவால் அதிகம் ?

மிகப் பெரிய சவால், ஒரு புறம் விவசாயிகளுக்கு ஒரு சிறந்த வாழ்வாதாரத்தை வழங்கவும், அவர்கள் சம்பாதிக்க உதவும் நமது தொலைநோக்குப் பார்வை உண்மையாக இருக்க வேண்டும், அதே சமயம் நிலையான வணிகத்தை உருவாக்க பாதுகாப்பான மற்றும் தரமான உணவுகளை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வழங்கவேண்டும்.
எனவே விவசாயி – வாடிக்கையாளர்கள் இருவர் நலனுற்கும் முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும்.
இதுபோன்ற முன்னுரிமை கொடுக்கப்படவேண்டிய துறையில் வங்கிகள் மற்றும் அரசாங்க அமைப்புகளின் ஆதரவு குறைவாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

விவசாயத்துறையில் நஞ்சில்லா விவசாயம் முக்கியத்துறையாக வளர்ந்து வந்தாலும் தனிப்பட்ட முறையில் செய்வதை விட இதுபோன்று நிறுவனங்களுடன் சேர்ந்து செய்யும்போது நமக்கு தொழில்நுட்பமும் சிறந்த முறையில் கிடைக்கும். தமிழகத்தில் இதுபோன்ற நிறுவனங்கள் மேலும் பெருகவேண்டும். அப்போதுதான் விவசாயம் மூலம் நம்முடைய விவசாயிகளின் வாழ்வாதரம் மேம்படும். இதுபோன்ற முயற்சிகளை அக்ரிசக்தி (http://agrisakthi.com) நிறுவனமும் முன்னெடுத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது

Exit mobile version