உலகின் மிக வயதான என்று அறியப்பட்ட நம்பர் 16 என்ற சிலந்திப்பூச்சி தனது 43-வயதில் ஆஸ்திரேலியாவில் இறந்தது.
ஏறக்குறைய ஆராய்ச்சியாளர்கள் 43 ஆண்டுகள் இந்த சிலந்திப்பூச்சியின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.
இதற்கு மெக்சிகோ நாட்டில் உள்ள 28வயதான டிரான்டுலா எனும் சிலந்திப்பூச்சியே நீண்டநாட்கள் உயிரோடு வாழ்ந்தது என்ற சாதனையை படைத்திருந்தது. அதை இந்த நம்பர்16 என்று பெயரிடப்பட்ட இந்த சிலந்திப்பூச்சி முறியடித்துவிட்டது.
இந்த நம்பர் 16 என்று பெயரிடப்பட்ட இந்த சிலந்திப்பூச்சி, ஆஸ்திரேலியாவில் பெரும்பாலான இடங்களிலும், பூங்காக்களிலும், வளர்ந்த மரங்களிலும் காணமுடியும். இந்த வகை சிலந்திப்பூச்சிகளின் குணநலன்கள், நடவடிக்கைகள் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக இந்த நம்பர்-16 சிலந்திப்பூச்சி பயன்படுத்தப்பட்டது.
இது குறித்து ஆஸ்திரேலியாவின் கர்டின் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறையின் பேராசிரியர் லிண்டா மாஸன் கூறியதாவது:
கடந்த 1974-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மேற்குப்பகுதியில் உள்ள வீட்பெல்ட் பகுதியில் இருந்து நம்பர்-16சிலந்திப்பூச்சியை கண்டுபிடித்தோம். இதைக் ஆய்வாளர் பார்பாரா கொண்டுவந்து ஆய்வகத்தில் பாதுகாத்து, சிலந்திப்பூச்சிகளின் நடவடிக்கைகளை ஆய்வு செய்து வந்தார். இது காடுகளில் வாழக்கூடிய வைல்டு டிராப்டோர் வகையாகும்.
எங்களுக்குத் தெரிந்தவரை நம்பர்-16 என்று பெயரிடப்பட்ட சிலந்திப்பூச்சிதான் உலகிலேயே பதிவு செய்யப்பட்டத்தில் மிகவும் வயதான சிலந்திப்பூச்சியாக இருக்க முடியும். இதன் வாழ்க்கை முறை, பழக்கவழக்கம், குணநலன்கள் ஆகியவற்றை சிலந்திப்பூச்சிகளின் வகைகளின் நடவடிக்கைகளைஆய்வு செய்ய உதவியது. ஆனால், ஒருவிதமான ஒவ்வாமை நோய் காரணமாக இந்த சிலந்திப்பூச்சி இறந்தது.
எங்களின் நீண்டகால ஆய்வில், ட்ராப்டோர் வகை சிலந்திப்பூச்சிகளின் வாழ்க்கை முறை, வாழ்நாள், உணவுகள், பழக்க வழக்கம் உள்ளிட்டவற்றை அறிய முடிந்தது. இந்த சிலந்திப்பூச்சிக்கு துணையாக மற்றொரு ஆண் சிலந்திப்பூச்சியும் ஆய்வகத்தில் வைத்திருந்தோம்.
எதிர்காலத்தில் காடுகள் அழிப்பு, காலநிலை மாற்றம் ஆகியவற்றை இந்த வகையான சிலந்திப்பூச்சிகள் எப்படி எதிர்கொள்ளப்போகின்றன, தங்களை எப்படி மாற்றிக்கொள்கின்றன, எப்படிப் பாதிக்கும் என்பதை ஆய்வில் மூலம் அறிந்து வந்தோம்.
வழக்கமாக ட்ராப்டோர் வகையான சிலந்திகள் 5 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள்வரை மட்டும் உயிர்வாழும் தன்மை கொண்டது. நாங்கள் ஆய்வகத்தில் வைத்துப் பராமரித்ததால், 43 ஆண்டுகள் வரை உயிர்வாழ்ந்தது.