இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலம் தேயிலை உற்பத்தியில் தேசிய அளவில் 53% மும், உலக அளவில் 13% தேயிலை உற்பத்தி செய்கிறது அஸ்ஸாம் மக்களில் ஒரு கணிசமான மக்களின் வாழ்வாதாரம் தேயிலைத் தொழிலை சார்ந்திருக்கிறது – குறிப்பாக சுமார் பத்து லட்சம் தொழிலாளர்களும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான சிறு தேயிலை தொழில் முனைவோர்களும் இந்த தொழிலை நேரடியாக நம்பியுள்ளனர்.
2017 ல், 241 மில்லியன் (241,000,000 கிலோ) ஏற்றுமதியை சாதித்த,தேயிலையின் விலை பெரிய அளவில் அதிகரிக்கவில்லை. எனவே உற்பத்தி, தேவை மற்றும் வினியோகத்தில் மாற்றங்களை கொண்டுவரவேண்டியது அவசியம் . எனவே தேவையை அதிகரிக்க அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டியது அரசின் கடமை. எனவே தேயிலை வணிகத்தினை ஊக்குவிக்கவும் அதிக நிதி ஒதுக்க 15வது நிதித்துக்குழுவினை தேயிலை உற்பத்தியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்