Site icon Vivasayam | விவசாயம்

பானகம் பத்தி தெரிஞ்சுக்கலாமா?

https://www.pepperonpizza.com

பானகம் என்றால் நீரூடன் இனிப்பு கலந்த கலவை என்று நாமனைவரும் நினைப்போம், ஆனால் பானகத்தில் பல வகை உண்டு, உங்களுக்கு தெரியுமா? ஆதிக்காலத்தில் திருப்பதி கோயில் மலையேறுபவர்களுக்கு பிரசாதமாக முதலில் வழங்கப்பட்டது பானகம்தான், உழைப்பாளிகளின் உற்சாக பானமே இப்பானகம் என்று கூடசிலர் கூறுகின்றனர்
இந்த பானகம் பல வகைப்படும் , அவற்றைப் இப்போது பார்ப்போம், இப்போது என் பானகம் பற்ற தெரிந்துகொள்ளவேண்டும் தெரியுமா? கோடைக்காலம் வந்துடுச்சே அதான்

சர்க்கரைத்தண்ணீர்

குளிர்ந்த நீருடன் நாட்டுச் சக்கரை சேர்த்துகரைத்து ஏலம்,கிராம்பு,
கற்பூரம், மிளகுத்தூளைப் போட்டால் இதை சர்க்கரைத்தண்ணீர் என்கின்றோம்.
இது இந்திரியத்தைக் கொடுக்கும்.குளிர்ச்சியானது. நல்ல மலமிளக்கியாகும். வலிமையும் சுவையும் தரும்.
இலேசானது.நல்ல சுவையுள்ளது. வாதம்,பித்தம், இரத்தநோய், மயக்கம்,வாந்தி,தாகம்,காய்ச்சல்,முதலியவற்றைப்
போக்கும்.

மாங்காய் பானகம்

மாங்காயை நீரில் வைத்திருந்து நன்றாகப் பிசைந்து ,குளிர்ந்த நீரையிட்டுச் சிறிது நாட்டுச்சர்க்கரையும் சேர்த்து,கற்பூரம் ,மிளகுத்தூள், சேர்த்து தயாரித்தால் இதை ப்ரபானகம்என்பர்.இது பீமசேனன் தயாரித்ததாவும் வழக்கு உண்டு , நல்ல சுவையும் புலன்களுக்கு வலிமையும் தருவதாகும்.

புளியங்காய் பானகம்

புளியம்பழத்தை நீரில் நன்கு கரைத்துக்கொண்டு நாட்டுச்சர்க்கரையும் சிறிது மிளகுமிட்டு, கிராம்பு
முதலியவற்றை சேர்த்துப் பானகமாகச் செய்யலாம். இது வாதத்தை போக்கும்.இது
பித்தத்தையும்,சிலேட்டுமத்தையும் சற்று அதிகரிக்கச் செய்யும்.நல்ல சுவையுள்ளது.இது
செரிமானத்தையும் அதிகரிக்கச் செய்யும்.

எலுமிச்சைச்சாறு பானகம்

எலுமிச்சைச்சாறு ஓரு பங்கு,அத்துடன் நாட்டுச்சக்கரையும் கலந்து ஆறு பங்குநீரும் சேர்த்து
கிராம்பும் மிளகுமிட்டுச் செய்தால் இது பானகங்களில் தலை சிறந்ததாகும். இது வாதத்தை
உடனேபோகும்.பசியைஅதிகரிக்கச் செய்யும் . நல்ல சுவையுள்ளது.எல்லா வகையான
உணவையும் செரிக்கச் செய்யும்.

தனியா பானகம்

தனியாவைக் கல்லில் வைத்து நன்கு பொட்டிசெய்து துணியிலிட்டுச் சலித்து சர்கரை
நீருடன் கலந்து குற்பூரம் முதலியவற்றைக் கலந்து தயாரித்துப் புது மண்பாண்டத்தில்
வைத்துக் குடித்தால் பித்தத்தைப்போக்கும்.

எருமைத் தயிர் பானகம்

சற்று புளித்த கெட்டியான எருமைத் தயிரை நான்கில் ஒரு பங்கு தண்ணீருடன் கலந்து
நல்ல மண்பாண்டத்தில் துணியின் உதவியால் இறுத்தெடுக்க வேண்டும்.பின்னர் அதில்
வறுத்த காயம்,சீராகம்,உப்பு,கொஞ்சம் கடுகும் இட்டுப் பிசைந்து பானபமாகச் செய்தால்
அது யாவரும் பருகம் பானகமாகும்.
மோர் சுவையும் செரிமாணமும் பசியும் தரும்.வயிற்றுக்கோளாறுகளைப் போக்கித் திருப்தியை
உண்டாக்கும்.
நாவறட்சி தரும் உணவு வகைகைள உண்டபின் அதைப் போக்க உணவு முடிவில் பாலைக்
குடிக்கவேண்டும்.

குறிப்பு ( நிரீழிவு நோயாளிகள் மருத்துவர் அனுமதியின்றி இனிப்பு கலந்ததை பானகம் எடுத்துக்கொள்ளவேண்டாம் )

Exit mobile version