வறட்சி தாங்கி வளரும் இம்மரத்தை சிலர் பரம்பு என்பார்கள், இம்மரத்தை நாம் ஏன் அலட்சியப்படுத்தினோம் என்பது புரியவில்லை
விவசாயிகளுக்கு மிகவும் சிறப்பான உயிர்வேலியாகும்,முள்ளுள்ள இலையுதிர் மரம் என்றாலும் இது அதிகமாகப்
பக்கவாட்டில் படராமல் மேல்நோக்கிச் செல்லும் இயல்புள்ளது,
இதன் முள் மென்மையானது 25 அடிக்குமேல் உயர்வது அபூர்வம் 2 முதல் 3 அடி விட்டம் வரை அடிமரம் பருக்கும்,
மழைக்காலம் முடிந்த பின் பூக்கும் மஞ்சள் நிறப்பூங்கொத்துக்கள் உருவாகும் மார்ச் மே மாதம் வரை கனிகள்
கிட்டும் வன்னிப் பழத்தைச் சதையுடனும் விதையுடனும் பாலை நில மக்கள் விரும்பி உண்பர், குறிப்பாக ராஜஸ்தான்(மார்வார்)மக்களுக்கு வன்னி மரம் அவர்களின் உயிர் மரம் ராஜஸ்தானில் ஆடும் ஒட்டகமும் அதிகம்,
இரண்டுக்கும் உயிர்வாழ இன்னமும் வன்னி மரங்களே அவர்களின்ஜீவித பாக்கியம்,
1988ஆம் ஆண்டு ஜீன் 5ஆம் தேதி உலகச் சுற்றுச்சூழல் தினத்தில் இந்தியா வெளியிட்ட தபால்தலையில் வன்னி மரம் இடம் பெற்றிருந்தது, பஞ்சகாலத்தில் வாழ்வுதரும் வன்னிப் பழங்கள் சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் புரத சக்தி தரும்,கால்நடைக்குத் தீவனமாகவும், நின்று எரியும் விறகாகவும், பாலை நில மணலில் 60,70 அடிவரை வேர் ஊடுருவிச் செல்லும், தான் வாழ வறட்சியிலும் வழிதேடும் இம்மரத்தின் இலைகள் உதிர்ந்த காட்டில் உள்ள மண்ணைச் சோதனை செய்து பார்த்தபோது ஏராளமான அங்ககப்பொ ருட்களுடன் எல்லாப் பேரூட்டங்களும்( )நுண்ணூட்டங்களும் மண்கண்டத்தில் உருப்பெற்றுள்ளது நிரூபணமாகியுள்ளது
ஆகவே வன்னியை உயிர் வேலியாக வைத்து விவசாயிகள் வளம் பெறலாம், வன்னி மரத்தின் பாகங்கள் எல்லாமே நல்ல மருந்துகள்,தினமும் வன்னிக் கொழுந்தை பூ,காய்,பட்டை வேர் ஆகியவற்றை விழுதாக அரைத்து ஒரு கொட்டைப்பாக்கு அளவு எடுத்து 100 மில்லி பாலில் கலக்கி வடிகட்டி அருந்தி வந்தால் ஆயுள் விருத்தி, நோயில்லாமல் வாழலாம், சொறி,சிரங்கு ,கபம் பித்தம் எல்லாம் தணியும் ,வாதம் நீங்கும்
வன்னிப்பட்டையை கால் கிலோ எடுத்துப் பஞ்சுபோல் நசுக்கவும், ஒரு லிட்டர் விளக்கெண்ணையில்(ஆமணக்கு எண்ணெய்)
நன்கு காய்ச்சி வடித்து எடுத்துக்கொண்டு தினமும் காலை 25 மில்லி வீதம் 1 வாரம் வரை பெண்கள் அருந்தினால்
வெள்ளைப்படுதல் நீங்கும், கருச்சிதைவு ஏற்படாது,பட்டைக்கக்ஷாயம் தொண்டைப் புண்ணுக்கும் மருந்து
ஆகவே கோயிலில் தலவிருட்சமாக மட்டும் இதனை பயன்படுத்தாமல் யாவரும் பயன்பெறும் வகையில் எங்கும் வளர்ப்போம்
தகவல் தொகுப்பு
இணையம்
Good Message