1.சம்வத்சர வாரியம் – பொது வாரியம்
2.தோட்ட வாரியம் – தோட்டப் பயிர்களைப் பற்றியது
3.ஏரிவாரியம் – ஏரிகள் பாரமரிப்பு,ஏரிப் பாசனம்
4.கழனி வாரியம் – மருத நில வயல்களைப் பற்றியது
5.பஞ்ச வாரியம் – வரிவசூல் பற்றியது
6.கணக்கு வாரியம் – ஏரி,மதகு,அணைக்கட்டு,கலிங்கு போன்றவற்றை நிர்வகிப்பது
7.தடி வழி வாரியம் – வயல், பாத்திகஞக்கு செல்லும் பாதைகளைப் பற்றியது.
அரசர்காலங்களில் ஒட்டுமொத்த மேலாண்மையும் கிராம சபை, நகர சபை மற்றும் வாரியங்களால் மேலாண்மை செய்யப்பட்டது, ஏனெனில் அரசர் வெகு தொலைவில் உள்ள தலைநகரில் இருப்பார், அவருக்கு அந்த ஊர் சார்ந்த எந்த விசயமும் தெரியவாய்ப்பில்லை, அதனால் கிராம மபை, நகர சபைகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. ஆனால் இன்றோ ஆட்சியாளர்கள் முழு அதிகாரமும், கிராம சபைகளுக்கு அதிகாரம் மிகக்குறைவாகவே உள்ளது. ஆனால் இருக்கின்ற வைத்து நிறைய செய்தால் நல்லதே…
இவ்வாரியங்கள் இப்போதாவது உயிீர்பெறட்டும்