இன்று உலகம் முழுமையும் பேச்சப்படுகிற அறிஞா ஃபுகோகா கூறுகின்ற உழாத வேளாண்மையை அன்றைய தமிழர்கள் மிக இயல்பாகச் செய்திருக்கின்றனர்.மேலும் குறிஞ்சி நிலத்தின் முதன்மை விளைபொருள் ஐவன வெண்ணெல்லும் தினையும் ஆகும் . நன்செய் நிலத்தில் உள்ளது போன்ற சம்பா நெல் அங்கு இல்லை.
முல்லை நிழத்தில்தான் கலப்பையின் வருகை தொடங்குகிறது. அந்தக் கலப்பை கூட எளிய கலப்பைதான்.
பெரும்பாணாற்றுப்படை என்ற நூல்
“பிடிக்கணத்து அன்ன குதிருடை முன்றில்
களிற்றுத்தாள் புரையும் திரிமரப் பந்தர்
குறுஞ்சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி“ (196199)
என்று தவசங்களைத் சோத்து வைக்கின்ற குதிர்களையும் கலப்பையும் குறிப்பிடுகின்றது.
இதே கலப்பை மருத நிலத்திற்க்கு வரும் போது அகன்று விரிந்து ஆழ உழும் திறன் மிக்கதாய் ஆக்கப்படுகின்றது.
பெரும்பாணற்றுப் படையில்“
குடிநிறை வல்சிச் செஞ்சால் உழவர்
நடைநவில் பெரும்பகடு புதவில் பூட்டி
பிடிவாய் அன்ன மடிவாய் நாஞ்சில்
உடுப்பு முக முழுகொழு மூழ்க ஊன்றி“
என்று பெண் யானையின் வாயைப் போன்று மடிந்து அகன்று இருக்கின்ற பெரிய கலப்பையான நாஞ்சில் கலப்பை மருத நிலத்தில் வருகின்றது.இதை ஆழமாக ஊன்றி இழுப்பவை வலிமையான பகடுகள் எனப்படும் பெரிய மாடுகள்.இவை எவ்வளவு பள்ளம் இருந்தாலும் மண்டி போட்டு இழுக்கும் ஆற்றல் பெற்றவையாம்.
இதை வள்ளுவப் பொருமான் “மடுத்தவாயெல்லாம் பகடன்னான“ என்று மிகுந்த முயற்சி உடையவனுக்கு இணையாகப் பகடைக் கூறுகிறார்.வலுவான மாடுகள் அகன்ற கலப்பைகள் என்று வேளாண்மை மருத நிலத்தில் புதிய வடிவம் எடுக்கின்றது.விளைந்த தவசங்களைச் சோத்து வைக்க மிகப் பெரிய குதிர்களை அன்றைய மக்கள் வடிவமைத்தனர்.
“ஏணி எய்தா நீள் நெடு மார்பின் “(பெரும் 245) என்று மிக உயரமான குதிர்களைக் குறிப்பிடுகின்றது.
விளைந்த விளைச்சலும் அதிகமாகவே இருந்திருக்கின்றது.பொருநர் ஆற்றுப்படை என்ற நூல்.