தமிழகத்தில் கோடைக்காலம் ஆரம்பிக்கத் துவங்கியவுடன் கடந்த சில நாட்களாகவே வெயில் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு கோடையில் வெயிலில் சதம் அடித்த முதல் நகரமாக சேலம் உள்ளது. அதைத்தொடர்ந்து தருமபுரி,திருத்தணி, கரூர் பரமத்தி வேலூர்,வேலூர் நகரங்களில் அதிகப்பட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.
தற்போது தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களிலும் வெயில் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு கோடையில் வெப்பம் வழக்கத்தைவிட அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் முன்னரே அதிகப்படியான வெப்பம் பதிவாகும் நிலையில் அக்னி நட்சத்திரம் துவங்கினால் வெப்பமும், அதன் தாக்கமும் அதிகமாக இருக்கும். மேலும் தமிழகத்தில் பெய்யவேண்டிய பருவ மழையும் குறைவாக பெய்ததால் காய்கறிகளின் விலையும் உயர்ந்து வருகிறது. பருவமழையும் சரிவர பெய்யவில்லை. குடிநீர் ஆதாரங்களுக்கான அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீர் வேகமாக குறைந்து வருகிறது.எனவே இச்சூழ்நிலையிலும் நமக்குத் தேவையான நீர் ஆதாரத்தையும், கால்நடைகளுக்கான குடிநீர் ஆதாரத்தையும் சேமிக்க வேண்டியது மிக அவசியமாகிறது. குறிப்பாக கால்நடைகளுக்குத் தேவையான உணவுகளையும், நீர் ஆதாராத்தையும் சேமித்து அவர்களை இக்கோடையின் உக்கிரத்தில் இருந்து காப்பாற்றிக்கொள்ளவேண்டியது மிக அவசியம்
அதோடு முடிந்தவரை இரவில் நாம் அனைவரும் திரிபலா சூரணத்தை இரவில் வெந்நீரில் கலந்து குடித்துவர வெப்பம் மற்றும் சிறு நீர் கடுப்பிலிருந்து தப்பலாம்