Skip to content

கடும் வறட்சியை நோக்கி உலகின் 200 நகரங்கள், இந்தியாவில் பெங்களூரு, புனே

இன்று (22.03.2018) உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் துறை நடத்தும் டவுன் டு எர்த் என்ற பத்திரக்கை ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில், உலகின் 200 நகரங்கள் கடுமையான குடிநீர் பஞ்சத்தை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கின்றன. இவற்றில் முதல் 10 அபாய நகரங்களில் பட்டியலில் பெங்களூருவும் இடம் பெற்றுள்ளது.

வளர்ச்சியை ஒரே நகரத்தினை மையமாக கொண்டிராமல் இந்தியாவில் எல்லா நகரங்களிலும் வளர்ச்சியை மேற்கொண்டால் இச்சிக்கலை சிறிது சிறிதாக தீ்ர்க்கலாம், ஆனால் ஒரே நகரத்தினை மையப்படுத்தி ஒட்டுமொத்த வளர்ச்சியையும் மேற்கொண்டு வருவதால் ஒட்டுமொத்த மனித வளமும் ஒரே இடத்தில் குவிக்கப்படுகிறது, இந்த எச்சரிக்கைக்குப் பிறகும் நாம் இப்பிரச்னையை கவனமாக கையாளாவிட்டால் சிக்கல் வெகு தூரமில்லை

இதனால் குடிநீர் பஞ்சத்தை நோக்கி வேகமாக செல்லும் டாப் 10 மெட்ரோ நகரங்களில் காபூல் (ஆப்கானிஸ்தான்), கராச்சி (பாகிஸ்தான்), இஸ்தான்புல்(துருக்கி), மெக்சிகோ (மெக்சிகோ), நைரோபி (கென்யா), கேப் டவுன் (தென்னாப்பிரிக்கா), பெங்களூரு (இந்தியா), பீஜிங் (சீனா), சானா (ஏமன்), சாவோ பாலோ (பிரேசில்) ஆகியன இடம்பெற்றுள்ளன.
முதல் 200 நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் புனே நகரமும் இடம் பெற்றுள்ளது. இந்நகரமும் அபரிமிதமான வளர்ச்சியை நோக்கி செல்வதால், கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj