Site icon Vivasayam | விவசாயம்

கழிவு நீர் – தமிழகம் சந்திக்கும் எதிர்கால சிக்கல்

Hands of farmers family holding a young plant in hands

விவசாயம் சார்ந்த சிக்கல்களையும் , அதற்கான தீர்வுகளையும் எதிர்நோக்குவதில் அக்ரிசக்தியின் விவசாயம் இணையத்தளம் மிகுந்த கவனமும் அதற்கான ஆய்வுகளையும் செய்துவருகிறது, விவசாயத்திற்கு நீர் இல்லாமலும், கால்நடைகளுக்கும், மனிதர்களுக்கும் போதிய அளவு நீர் கிடைக்காத போது கழிவு நீர் எனும் பிரச்னை நமக்கு பெரிய அளவில் இருக்கிறது. ஆம் கழிவு நீர் என்பது பிரச்னையல்ல, கழிவு நீரை சுத்திகரிப்பே செய்யாமல் நாம் நீராதாரங்களான ஆறுகள், குளம், குட்டைகளில் கலந்துவிடுவதால் நீர் மாசுபடுவதோடு, நிலத்தடி நீரும் மாசுப்பட்டுவிடுகிறது, அதனால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள் எண்ணிலடங்காதவை

தமிழத்தின் பெரும் நீர் ஆதாரங்களான காவிரி, வைகை, நொய்யல், பவானி,தென் பெண்ணை, பாலாறு மற்றும் பல சிற்றாறுகள் இருந்தாலும் அனைத்திலும் அந்த நகரங்களைச்சுற்றியுள்ள தொழிற்சாலைகள் கழிவுகள் , மனித கழிவுகள் போன்றவை முறைப்படி சுத்திகரிக்காமல் நமது நீர் ஆதாரங்களில் கலந்துவிடுவதால் நீர் ஆதாரங்களின் சுகாதாரம் பெரும் கேள்வி்க்குறியாகி உள்ளது.

கர்நாடகாவில் இருந்து வரும் காவிரியில் அதிகப்படியான கழிவு நீர்களை சேர்த்து வெ ளியேற்றுவதாக குற்றம்சாட்டும் நம்மூர் ஆட்கள் நம் நீர் ஆதாரங்களில் இங்கேயே கலந்துவரும் கழிவு நீர்களை கண்டுகொள்வதே இல்லை.

கழிவு நீர் எனப்படுவது ஆங்காங்கே உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயான நீர், மனித கழிவுகள், ஓட்டலில் இருந்து வெளியேற்றறப்படும் உணவு சார் சாயம் கலந்த நீர், வீணாகும் உணவுகள், துணி துவைத்த நீர் என எல்லா நீருமே கழிவு நீர்தான். இந்நீரை நாம் மீண்டும் பயன்படுத்த வேண்டுமெனில் அவை வெ ளியேற்றப்படும் இடத்திலயே சுத்திகரிக்கப்படவேண்டும். ஆனால் யாரும் அவ்வாறு செய்வதில்லை என்பது நாம் பெரும்பாலும்
கண்கூடாக பார்த்துவருகின்றோம், சேமித்து வைக்கப்படும் குப்பைகளில் நீர் சேரும்போது அதுவுமே கழிவு நீராகத்தான் இருக்கிறது.

காவிரி நதியில் கழிவு நீர் கலப்பதாக செய்திகள் வெளியாகின்றன. கர்நாடகாவில் பெங்களூர் தனியார் நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெளியேறும் கழிவு நீர் சுமார் 148 கோடி லிட்டர் காவேரியில் கலந்து தமிழகத்திற்குள் வருகின்றது. காவேரியில் விடப்படும் கழிவு நீரின் காரணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் அளவை விட 10 மடங்கு அதிமாக நீரில் மாசு நிறைந்திருப்பதாகவே மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக பத்திரிக்கை குறிப்புகள் தெரிவிக்கிறது.

அதோடு திருநெல்வேலி மாநகராட்சியில் 1,40,216 குடியிருப்புகளில் நாளொன்று க்கு 180 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படு கின்றன. இவைகளில் பெரும்பகுதி தாமிரபரணி ஆற்றங்கரையில் கொட்டப்படுகின்றன. மேலும் இறைச்சி கழிவுகளும் ஆற்றில் கொட்டப்படுகின்றன. 87 இடங்களில் (கருப்பந்துரை டூ வெள்ளக்கோவில்) ஒரு நிமிடத்திற்கு 11 லட்சம் லிட்டர் கழிவு நீர் தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது.திருநெல்வேலி – தூத்துக்குடி மாவட்டங்களில் 686 இடங்களில் சாக்கடை கலக்கிறது.

வைகை ஆற்றில் கோச்சடை முதல் விரகனூர் வரை 67 இடங்களில் கழிவு நீர் ஆற்றில் கலக்கிறது. சுமார் 320 தொழிற்சாலைகளின் கழிவுகளும் கலக்கிறது

இதோ மதுரையை நெருங்க நெருங்க கழிவு நீர் அதிகமாக இருக்கும் வைகை ஆற்றின் நிலை என்ன வென்றால் வைகையில் தினமும் கலக்கும் 98 லட்சம் லிட்டர் கழிவுநீர் வைகை ஆற்றில் கலக்கிறது.பெரும் நகரங்களில் இருந்து வெ ளியேற்றப்படும் கழிவு நீர்களால் நம்முடைய சுற்றுப்புறம் பெரும் சீர்கேடுகளை சந்திக்கும். எனவே நீிர்நிலைகளில் அருகே நிறைய மரங்களையும், ஆறு, கால்வாய், குளம், குட்டைகளில் பகுதிகளைச் சுற்றி மரங்களை அதிகமாக நடவேண்டும், அதே சமயம் வீணாகும் நீரை அங்கேயே மறுசுழற்சி செய்ய கண்டிப்பான முறையில் தொழிற்சாலைகளும் செயல்படவேண்டும், ஏனெனில் நீர் ஆதாரம் என்பது நமக்கு மிக இன்றியமையாதது.

குறிப்பாக ஜவுளி சார்ந்த தொழிற்சாலைகள் சாயங்களுக்கு மரபு வழியில் சாயம் கொடுக்க முயலவேண்டும்,அதற்கான ஆய்வுகளை நாம் இன்னமும் அதிகரிக்கவேண்டும், அதோடு வாசிங் மெசினில் பயன்படுத்தப்படும் டிடர்ஜெண்ட்கள் அல்லாத மறுசுழற்சிக்கு ஏற்றவாறு பவுடர்களை உற்பத்தி செய்யவும் அதிகப்படியான ஆய்வுகளை நாம் மேற்கொள்ளவேண்டியது அவசியமாகிறது, அதோடு வீணாகும் உணவுக்கழிவுகளைக் கொண்டு சுற்றுப்புறச் சூழல் கெடாத அளவு மறுசுழற்சிக்கோ அல்லது இயற்கை உரமாக பயன்படுத்தவோ முயலவேண்டும்.

அடுத்த தலைமுறை வாழ்வதற்கு ஏற்ற ஒரு நல்ல சூழலை உருவாக்கித்தருவது நம் அனைவரின் கடமை

இணைப்புகள்
http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-98-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/article9722650.ece

https://tamil.oneindia.com/news/tamilnadu/karunanidhi-condemns-karnataka-on-drainage-cauvery/articlecontent-pf156901-227171.html

செல்வமுரளி

Exit mobile version