வேளாண்மை துறை சார்பில், விதை செயலி (சீட்ஸ் ஆப்) அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விதை விற்பனையாளருக்கு, விதை செயலி குறித்த விளக்க பயற்சி திருவள்ளூரில் நேற்று நடந்தது.
விதை ஆய்வு துணை இயக்குனர் உத்தரவின் படி நடந்த இந்த நிகழ்ச்சியில், விதை ஆய்வாளர்கள் அனிதா, உமா மகேஸ்வரி மறறும் வேழவேந்தன் ஆகியோர் பயிற்சிஅளித்தனர்.
விதை செயலி பயன்பாடு, விதை இருப்பு, விற்பனை விபர அறிக்கை ஆகியவற்றை, விதை செயலி மூலம் வாரம்தோறும் சமர்ப்பிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது. விதை செயலி மூலம் கிடைக்கும் விபரங்களைக் கொண்டு, சக விதை விற்பனையாளர்களும், விலை, தேவையான ரக இருப்பு விபரங்களை அறிந்து கொள்ள முடியும். பருவம், பயிர் பரப்புக்கு தேவையான விதை இருப்பு உள்ளதா என்பதை, அரசு அறிந்து, விதை இருப்பை உறுதிப்படுத்த ஆவன செய்ய இந்த செயலி உதவியாக இருக்கும் என, எடுத்துக் கூறப்பட்டது.
மேலும், தரமான நிதை கொள்முதல், பராமரிக்கப்பட வேண்டிய அறிக்கைகள், சுகாதார முறையை அறிந்து கொள்ளலாம்.
பயிற்சியில், விதை பகுப்பாய்வாளர் சிலம்பரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.