Vivasayam | விவசாயம் ⚡ AMP

மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ.1,000 வரை உயர்வு

By Editor | Feb 26, 2018

ப.வேலுார் தாலுகாவில், மரவள்ளிக்கிழங்கின் விலை, டன் ஒன்றுக்கு ரூ. 1,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் தாலுகாவில் எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதுார், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில், மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.

அவை, கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு, ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும், சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். கிழங்கின் விலை, மாவுச்சத்து, புள்ளிகள் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த வாரம், டன், 6,500 ரூபாய் வரை விற்பனையானது. இந்த வாரம் டன் ஒன்று 7,500 ரூபாய் வரை விற்பனையாகிறது. கிழங்கின் வரத்து குறைந்துள்ளதால், விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.