காஞ்சிபுரம் மாவட்டம் சித்தாமூர் ஒன்றியம், சிறுக்கரணையில் விவசாயி ஒருவர், தனக்கு சொந்தமான நிலத்தில், 4 ஏக்கரில் நடத்தும் தனியார் விதை உளுந்து வாங்கி பயிர் செய்தார். ஆனால் உளுந்து விதையில் போதிய முளைப்பு தன்மை இல்லை. இதனால் தன்னுடைய உழைப்பு வீணாகியுள்ளதாக அவரும், அதே போன்று தரமில்லாத தனியார் நிறுவனங்களிடம் வாங்கிய பிற விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர்.
வேளாண் துறையில், ‘வம்பன் -8’ உளுந்து விதைக்கு தட்டுப்பாடு இருந்ததால், ‘அக்ரோ சென்டர்’ நடத்தும் தனியார் விதை வியாபாரிகளிடம் கிலோ, 220 ரூபாய்க்கு, 16 கிலோ வம்பன் -8 உளுந்து விதையை வாங்கி, 4 ஏக்கரில் விதைப்பு செய்ததாகவும், விதைகள் முளைப்பு தன்மை இல்லாததால், உளுந்து பயிர் முளைக்கவில்லை. இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன் எனவும் வேளாண் துறையில் எல்லா விவசாயிகளுக்கும் விதைகள் தட்டுப் பாடின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் அந்த விவசாயி கோரிக்கை வைத்துள்ளார்
தனியார் விதை வியாபாரிகள் விதைகளை அதிக விலைக்கு விற்பதை கண்காணித்து தரமான விதையை, விற்பனை செய்ய, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.