விலை குறைவால் இருப்புக்கு செல்கிறது கொண்டைகடலை
கொண்ைடக்கடலையின் கொள்முதல் விலை குறைந்து வருவதால், ஒழுங்குமுறை விற்பனைக்கூட குடோன்களில் இருப்பு வைக்க துவங்கியுள்ளனர்.
உடுமலையில், நடப்பு பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளம், கொண்ைடக்கடலை அறுவடை பணிகள் நடந்து வருகின்றன. குவிண்டால் மக்காச்சோளம், 1,200 ரூபாய் முதல், 1,240 ரூபாய் வரைக்கும், கொண்ைடக்கடலை, 4,500 ரூபாய் முதல், 4,600 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.
கடந்தாண்டைக்காட்டிலும், மக்காச்சோளம் மட்டுமில்லாமல் தானியங்களின் கொள்முதல் விலை குறைந்துள்ளதுடன், தொடர்ந்து சரிந்து வருவதால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் வாய்ப்புள்ளது.
இந்நிலையில், மாற்று வழியாக ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் இருப்பு வைத்து பயன்படுத்த, விற்பனைக்குழு அதிகாரிகள் விவசாயிகளுக்கு அறிவுறுத்தி வந்தனர்.
ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இருப்பு வைப்பதற்கு, உலர்களத்தில் தானியங்களை காயவைத்து தரம்பிரிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது. இருப்பு வைக்கப்படும் தானியங்களின் மதிப்புக்கேற்ப, விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் பொருளீட்டுக்கடன் வழங்கப்படுகிறது. குறைந்தப்பட்சம், 6 மாதம் வரை விவசாயிகள் குடோன்களில் இருப்பு வைத்துக்கொள்ளலாம் என ஒழுங்குமுறை விற்பனைக்கூட நிர்வாகம் தெரிவித்துள்ளது.