Skip to content

கோடை ஆரம்பிக்கும் முன்பே வறட்சி

கோடை காலம் ஆரம்பிக்கும் முன்பே தமிழகத்தின் பெரும்பகுதிகளில் வறட்சி நிலவத்தொடங்கிவிட்டது. எனவே கோடைக்காலத்துக்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசு தரப்பிலும் , தனி நபர்கள் தரப்பிலும் எடுக்கவேண்டியது அவசியமாகிறது,

கடும் வறட்சி நிலவத்தொடங்கிவிட்டதால் இப்போதிருந்தே தமிழகத்தின் காடுகளில் உள்ள வன விலங்குகள் வசிப்பிடங்களை நோக்கிவர துவங்கியுள்ளன

குறிப்பாக கொடைக்கானலில்  உள்ள வனப்பகுதிகளில் அரிய விலங்குகளான புலி, சிறுத்தை, காட்டுமாடு, மான், கேழையாடு, சருகுமான் போன்ற விலங்குகளும், பல பறவைகளும் வசிக்கின்றன. தற்போது நிலவும் கடும் வெயிலால் விலங்குகள் வனப்பகுதியை விட்டு நகரப் பகுதிகளுக்கு இடம் பெயர்கின்றன.
மான் போன்ற விலங்குகள் உணவை தேடி வத்தலக்குண்டு ரோட்டின் டம்டம் பாறை அருகே உள்ள எலி வால் அருவி பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளன. அவற்றை சுற்றிய வனப்பகுதிகளிலும் மரங்கள் காய்ந்துள்ளன.

இப்போதைய சூழ்நிலையில் மழை பெய்தால் மட்டுமே பசுமை நிலவும் வாய்ப்புள்ளது. எனவே தமிழகத்தின் வறட்சியின் பிடியில் உள்ள வனப்பகுதிகளில் ஆங்காங்கே காட்டு விலங்குகளுக்கான தண்ணீர் தொட்டிகள் அமைக்க அரசு தரப்பிலும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதே சமயத்தில் இக்கோடைக்காலத்தில் நீர் நிலைகளில் உள்ள ஆற்றுப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு பணிகளையும், கால்வாய்களை சீரமைக்கவேண்டிய பணிகளையும் அரசு மேற்கொண்டால் எல்லா தரப்பு மக்களும் பயன்பெறுவர்

தனிநபர்கள் தங்கள் இல்லங்களில் பறவைகள் மற்றும் வீட்டு விலங்குகளுக்குத் தேவையான தண்ணீரை ஒரு சிறிய தொட்டி போன்று அமைத்து பறவைகளுக்கு பசியாற்றலாம்

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj