சத்தியமங்கள் பகுதிகளில் ஏறக்குறைய 2,000 ஏக்கர் பரப்பளவில் புகையிலை சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது புகையிலை அறுவடைக்காலமாகும் இந்தாண்டு, புகையிலை எதிர்பார்த்ததை விட விளைச்சல் அதிகமாக உள்ளது.
இதனால் விலை குறைந்துள்ளது. வழக்கமாக புகையிலையை, வியாபாரிகளே நேரடியாக குத்தகைக்கு எடுத்து, அறுவடை செய்து எடுத்து சென்று விடுவர். நடப்பாண்டு விளைச்சல் அதிகரித்ததால், குறைந்த விலைக்கு வியாபாரிகள் கேட்டுள்ளனர், ஆனால் இந்த விலை, சாகுபடி செலவுக்கே கட்டுப்படாது என்பதால், தாங்களே அறுவடை செய்த விவசாயிகள், தோட்டத்திலேயே பட்டறை அமைத்து, இருப்பு வைக்கின்றனர். 15 முதல், 20 நாட்களுக்கு பின் காய்ந்த பிறகு, புகையிலையாகவே வியாபாரிகளுக்கு, நேரடியாக விற்கலாம். இதனால், ஓரளவு லாபம் கிடைக்குமென, விவசாயிகள் தெரிவித்தனர்.