தென்னிந்திய மாநிலங்களில் நடப்பாண்டில் நிலவும் சாதகமான பருவநிலையால் டிராக்டர் விற்பனை அதிகரித்து வருகிறது. குறிப்பாக நடப்பாண்டில் தமிழகத்தில் டிராக்டர் விற்பனையில் 85 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளோம் என்று சோனாலிகா நிறுவனம் தெரிவித்துள்ளது,. சென்னையில் நேற்று சோனாலிகா `சிக்கந்தர்’ என்கிற டிராக்டர் மாடலை அறிமுகப்படுத்தி பேசிய அந்த நிறுவனத்தின் வர்த்தக பிரிவு தலைவர் முதித் குப்தா இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் பேசியதாவது,
மோசமான பருவநிலையால் கடந்த இரண்டு நிதியாண்டுகளாக டிராக்டர் விற்பனை சரிவைக் கண்டிருந்தது. இந்த நிலையில் நடப்பாண்டில் நிலவும் சாதகமான பருவநிலையால் டிராக்டர் விற்பனை அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 45 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளோம். வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் விவசாயத் துறைக்கு அளித்துள்ள முக்கியத்துவம் போன்றவற்றால் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும்.
தமிழகத்தில் தற்போது 29 டீலர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையை 50 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். தமிழகத்தில் 41 ஹெச்பி முதல் 50 ஹெச் பி திறன் கொண்ட டிராக்டர்களின் விற்பனை 80 சதவீதமாக உள்ளது. தற்போது அறிமுகம் செய்துள்ள சிக்கந்தர், குறைந்த டீசலில், அதிக மைலேஜ் மற்றும் அதிக வேகம் என்கிற அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தமிழக நிலப்பரப்புகளுக்கும் பொருந்தும். என்றும் அவர் தெரிவித்தார்,
ஆனால் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்படும் டிராக்டர் பெயர் தமிழில் பெயர் இல்லை என்பது வருந்தத்தக்கது.