சீனாவின் தென்மேற்கில் பகுதியில் உள்ள யுன்னான் மகாணத்தில் உள்ளது. , இம்மாகாணத்தின் தலைநகர் குன்மிங். கிமு இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இது ஹன் அரச வம்சத்தின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. இம்மகாணத்தின் தெற்குப்பகுதியில் உள்ள ஹோங்கே ஹானி நெல் மலைச்சரிவுப் பகுதியை வெறும் சாதாரணமாக எண்ணிவிடக்கூடாது.
கடந்த 1,300 ஆண்டுகளில் ஹானி மக்கள், மிகவும் சிக்கலான ஒரு பாசன நடைமுறையை உருவாக்கி இருக்கிறார்கள். காடுகளைக் கொண்ட மலைச்சரிவில் இருந்து இறங்கி வரும் தண்ணீர் வாய்க்கால்கள், ஆழமற்ற வயல்வெளிகள் வழியாக ஓடி, கடைசியாக ஹாங் நதியில் கலக்கிறது. ஆயிரம் கைகள் இணைந்து காலங்காலமாக உருவாக்கப்பட்ட இந்த நடைமுறை இன்றைக்கும் அப்பகுதியின் முதன்மைப் பயிரான சிவப்பரிசி விளைச்சலுக்கு ஆதாரமாகத் திகழ்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்
நம் விவசாயி்களிடையே இந்த கூட்டு முயற்சி தொடரவேண்டும் என்பதே அக்ரிசக்தியின் ஆவல்