தமிழகத்தின் வெங்காய தேவையை பெரிதும் பூர்த்தி செய்யும் கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த தொடர் மழை காரணமாக, பெரிய வெங்காயம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், வரத்து குறைந்ததால், இரு மாதங்களாக, விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில், பெரிய வெங்காயம் விலை, ஒரு கிலோ, 14 ரூபாயில் இருந்தது, தற்போது, 55 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதே கால கட்டத்தில், சின்ன வெங்காயம் விலை, 150 ரூபாய்க்கு மேல் விற்பனையானது. தற்போது, மழை காலம் முடிந்ததை அடுத்து, வெங்காய சாகுபடி அதிகரித்துள்ள நிலையில், சின்ன வெங்காயம் விலை அதிரடியாக குறைந்து வருகிறது. ஆனால், பெரிய வெங்காயம் விலை குறையவில்லை. இதனால், ஓட்டல்களில் ஆம்லெட்டில் பயன் படுத்தும் வெங்காயம் அளவு வெகுவாக குறைந்துள்ளது. அதேபோல் மற்ற உணவுகளில் வெங்காயம் சேர்ப்பதும் பாதியாக குறைந்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், முட்டைகோஸ் குறைந்த விலைக்கு கிடைத்து வருவதால், பெரிய வெங்காயத்துக்கு பதில், ஆம்லெட்டு களில், முட்டைகோஸ் பயன்படுத்தப்பட்டு வருவதாக, ஓட்டல் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.